பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யெடுத்து வந்து விடுவரோ என அஞ்சுகிறது என் உள்ளம்" எனக் கூறி, விறலியரின் ஆடல் பாடல்களில் ஆழ்ந்து போவதால் வரக்கூடிய கேட்டினை உணர்த்துவார்போல், விறலியர்தம் ஆடல் பாடல்களில் ஈடுபட்டுப் போகும் அவன் செயலைக் கண்டித்திருக்கும் முறை பாராட்டற்குரியது.

"குணகுட கடலோடு ஆயிடை மணந்த பந்தர் அந்தரம் வேய்ந்து, வன்பிணி அவிழ்ந்த க்ண்போல் நெய்தல் நனையுறுநறவின் நாடுடன் கமழச் சுடர்நுதல் மடநோக்கின் வாணகை இலங்கு எயிற்று அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர் பாடல் சான்று நீடினே உறைதலின், வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்மென உள்ளுவர் கொல்லோ நின் உணராதோரே?”

             -பதிற்றுப்பத்து 51 : 15.24.

ஆடவரும் மகளிரும் கைகோத்து ஆடும் துணங்கை ஆட்டம் ஒன்றில், ஒரு பெண்ணிற்குக் கைகொடுத்தான் சேரலாதன். இதனை அறிந்த அரசமாதேவி, அவன்மீது சினம்கொண்டு, தன்கையில் பிடித்திருந்த குவளைமலர் மாலையை அவன்மீது எறிய ஓங்கிளுள். அது கண்டான் சேரலாதன் குவளைமலர் மென்மை வாய்ந்தது; வீசி எறிந்த அளவே வாடிவிடும் என்ற அதன் இயல்பு உணர்ந்த அவன், அரசமாதேவியை அணுகி,"தேவி குவளைமல்ரை வீசி எறியாதே; வாடிவிடும்; என் கையில் தந்துவிடு"எனத் தன் இருகை விரித்து இரந்து நின்றன்; ஆனால் அரசமாதேவியோ, அவன்மீது கொண்ட ஊடல் தணியாமையால், அவள் அவனிடம் தர மறுத்து, "நீ யாரோ, நான் யாரோ?"ஆகவே, நின்னிடம் தாரேன்”

12

12