பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு இருமுறை எள்ளி நகையாடியதன் மூலம், இல்லாள்பால் அவன் கொள்ளும் அன்புப்பெருக்கையும், பிறர்க்குக் கொடுத்து வாழ்வதல்லது, பிறர்பால் இரந்துவாழா அவன் கொடைப் பெருமையையும். பகைவர் கோட்டைகளைப் பாழாக்கவல்ல அவன் பேராற்றலையும், ஒருங்கே உணர்த்தி. யிருக்கும், பதிற்றுப் பத்துப் பாநலம்,பாராட்டற்கு உரியது.

"முழாஇமிழ் துணங்கைக்குத் தழுஉப் புணையாகச் சிலைப்பு வல்லேற்றின் தலைக்கை தந்து நீ, நளிந்தனை வருதல் உடன்றளஸ் ஆகி...... ... . நின், எறியர் ஒக்கிய சிறுசெங்குவளை ஈ என இரப்பவும் ஒல்லாள்; நீ எமக்கு யாரையோ? எனப் பெயர்வோள் கையதை கதுமென உருத்த நோக்கமொடு, அது நீ பாஅல் வல்லாய் ஆயின; பாஅல் யாங்கு வல்லுநையோ... ... ....... வேந்தர்தம் எயிலே?"

                     -பதிற்றுப் பத்து: 52

"பாரி பாரி என்றுபல ஏத்தி, ஒருவன் புகழ்வர் செந்நாப் புலவர்; பாரி ஒருவனும் அல்லன்; மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே"(புறம்: 107) என்றும், "அறுகுளத்து உகுத்தும், அகல்வயல் பொழிந்தும் உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும், வரையா மரபின் மாரி போலக், கடாஅ யானைக் கழற்கால் பேகன், கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்" (புறம்: 142) என்றும் கூறி, வள்ளல்கள் வழங்கும் கொடைவளத்திற்கு, மழையை உவமை காட்டுவது புலவர் வழக்கம்.

அப்புலவர்கள் வழியைப் பின்பற்றி, சேரலாதன் கொடை வளத்திற்கு, மழையை உவமை கொள்வதில் புதுமுறை

14

14