பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகல் குறைந்து இரவு நீளும் காலம் என்ற உணர்வு வந்தது: உள்ளம் கலங்குகிருன்! ஆயினும் சென்று முடிக்க வேண்டிய வினையின் இன்றியமையாமை, தொடங்கின் இடையில் மடங்கல் கூடாது என்ற உள்ளுணர்வுகள் உந்த உறுதி குலையாமல், குளிரின் கொடுமைக்கு அஞ்சி தலைகுனிந்த வாறே செல்கின்ருன்; நெடுந்தொலைவு சென்றதும், கழுத்தின் வலிபோகத் தலையைச் சிறிதே நிமிர்த்தினன்; அவன் உள்ளம் இன்பத்தில் ஆழ்ந்து விட்டது! கிழக்கே ஞாயிறு தோன்றி விட்டான்; இருள் அகன்று விட்டது; அவன் வெப்பத்தால் குளிரும் அகன்று விட்டது. அந்நிலையில் அவன் மகிழ்ச்சிக்கு எல்லை காண இயலுமோ? இயலாது; அவ்வழி நடையான் மகிழ்ச்சியை, வறுமையால்வாடி, அது தீர்க்கவல்லானைத் தேடி அலைந்துதிரிந்த இரவலர்கள், தம்போலும், இரவலர்தம் துயர் துடைக்கும் சேரலாதனைக் கண்டவழிக் கொள்ளும் மகிழ்ச்சிக்கு உவமை காட்டியிருக்கும், பத்துப்பாட்டின் பாநலம் பாராட்டற்கு உரியது.

"பகல் நீடாகாது, இரவுப் பொழுதி பெருகி மாசிநின்ற மாகூர் திங்கள் பணிச்சுரம் படரும் பாண்மகன் உவப்பப் புல்லிருள் விடியப் புலம்புசேண் அகலப் பாயிருள் நீங்கப் பல்கதிர் பரப்பி ஞாயிறு குணமுதல் தோன்றியாங்கு இரவல்மாக்கள் சிறுகுடி பெருக உலகம் தாங்கிய....செல்வர் செல்வ.”

              -பதிற்றுப்பத்து. 59: 1-7-10.

17

17