பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்துற்றதும் சென்று தங்கும் குடிலாக நின்று, பயன்தருவனவும், கொத்துக்கொத்தாகக் காட்சியளிக்கும் மலர்களையும், கரிய பெரிய கிளைகளையும் உடையனவுமாகிய, புலிநகக், கொன்றை மரங்கள் மலிந்ததும், மலர்களின் மதுவுண்டு மகிழும் வண்டுக்கூட்டங்கள் மொய்க்கும் மாண்புடையதும், அடம்பக்கொடிகள் அடர்ந்து படர்ந்திருக்கும் கரைகளில், நண்டுகள் மேய்தலால் உண்டாம் அடிச்சுவடுகள் மறையுமாறு, நுண்மணலை, ஊதைக்காற்று ஒயாது தூவும் இடமாயதுமாகிய, அழகிய பனஞ்சோலேயே, இருந்துஇன்பம்துய்த்த, தற்கு ஏற்புடைய இடமாம் எனத்தேர்ந்தான். உடனே, அப்பொழிலிடையே, ஆடுகோட்பாட்டுச்சேரலாதனும், அவனத் தொடர்ந்து வரும் அமைச்சர் முதலாம் அரசியற்பணியாளர் களும் ஒருங்கே இருத்தற்கு ஏற்ற பெரிய பந்தல் ஒன்று அமைக்கப்பெற்று, நறவம், நெய்தல், நாகு எனும் பல்வேறு மலர்களால் அழகு செய்யப்பெற்றது. வடஇமயமும், தென்குமரியும், கீழ்க்கடலும், மேல்கடலுமாகிய அந்நான்கு எல்லைகட்கும் நடுவணதாய், அவன் ஆட்சிக்கீழ் உட்பட்ட நாட்டைச் சேர்ந்த நல்லோர் அனைவரும், ஒருசேரவந்து வீற்றிருக்கும் அப்பந்தற்கண், அவரிடையே அமர்ந்திருந்து, அழகின் திருவுருமாம் என மதிக்கத்தக்க மாண்புமிகு ஆடல்மகளிரின் ஆடல்கண்டும், அமிழ்தம் போல் இனிக்கும் அவர்பாடல் கேட்டும் களிந்திருந்தான் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதைேடு ஆங்குச் சென்று, அவ்வின்பநிகழ்ச்சிகளில் பங்குகொண்டு களித்த புலவர், காக்கைப் பாடினியர் நச்செள்ளையார் உள்ளத்தில், ஐயத் தொடுபட்ட ஒர் அச்சம் குடிகொண்டது. ஆடுகோட்பாட்டுச்சேரலாதைேடு அணுக்கமாய் இருந்து பழகியறியாப்பிழையால், அவன் இயல்பை உள்ளவாறு உணரமாட்டாதார், அவன்மேற்கொண்டிருக்கும் இவ்வின்ப நாட்டத்தைக் கண்டு,

20

20