பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், இன்பத்துறையில் எளியன் போலும் என எண்ணி விடுவரோ? அவ்வாறு எண்ணியதின் பயனுய், அவனை வெற்றிக்கொள்வது எளிது எனக்கொண்டு, அவன்மீது போர்தொடுத்து வந்து அழிந்து போவரோ என்றெல்லாம் எண்ணத்தலைபட்டார். அதல்லை அதுபோல் எதுவும் நிகழ்ந்துவிடாமைகுறித்து, அவர்க்கு உண்மை உரைத்து விழிப்பூட்ட விரும்பினர்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் பகைவர்க்கு அறிவுரை கூறக்கருதிய புலவர் நச்செள்ளையார், அதே நிலையில் மற்ருென்றும் கருதினர். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மேற்கொண்டு வந்திருக்கும் இவ்வின்ப நுகர்ச்சி, ஓயாது போரே மேற்கொண்டு அலையும் அரசர்க்கு, அல்வப்போது வேண்டுவதொன்றே என்ருலும், அவர்கள் அதிலேயே ஆழ்ந்துவிடுவாராயின், அழிவு அவரைத் தேடிவந்து அடைந்துவிடுமாதலின், அவர்கள், அத்துறையில் அளவிறந்து போகாதபடிப் பார்த்துக்கொள்ளவும், அளவிறந்து போகும் நிலையில், அதனுல் ஆகும்கேட்டினை எடுத்துக்கூறித் திருத்தவும், அவர்நலம் கருதும் ஆன்ருேர் கடமைப்பட்ட வராவர்."இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக, தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து" என்பது வள்ளுவர் வாக்கு. நாடாளும் இந்நெறி முறையை, நச்செள்ளையார் நன்கு உணர்ந்திருந்தமையால், இன்பத்துறையில் அளவிற்கு மீறிய ஆர்வம் கொண்டு, அமர்த்துறையை அறவே மறந்து விடுவது அறிவுடைமையாகாது என்பதை எடுத்துக்கூறி, ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை விழிப்படையப்பண்ணுவதும் தம் கடமையாம் என உணர்ந்தார்.

அக்கடமையுணர்வு வரப்பெற்றமையால், 'மழை தரும் கார்மேகங்கள் வந்து தங்குமளவு உயர்ந்த பெருமலைகளை

2 :

21