பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழிடமாகக் கொண்டுள்ளோம்; தீண்டினவர் உயிர்போக்கும் கொடிய நஞ்சுடையோராம்; பகைகண்டு பொருக் கடுஞ்சினம் உடையோம் என்ற உணர்வால் செருக்கித் திரியும் அரவுகள் போல், பெருநிலம்முழுதாளும் உரிமையுடையோம்; எம்மொடு பகைகொள்வாரைப் பாழாக்கும் பெரிய படை யுடையேம் என்ற உணர்வால் செருக்குற்று வீற்றிருக்கும் வேந்தர்களை, அரவுகள் தம்வாழிடம் விட்டு வெளிப்படாா நிலையில் உள்ளனவாகவும், அவற்றைத், தன்முழக்கொலி ஒன்றினலேயே அஞ்சி நடுங்கப்பண்ணி அழித்தொழிக்கும் இடியேறுபோல், அவ்வேந்தர்கள் அவரவர்களின் அரணகத்தே அடங்கியிருக்கும் நிலையிலேயே, உன் போர்முரசின் ஒலி கேட்டே நடுங்கி நிலைகுலையப் பண்ணும் பேராற்றல் வாய்ந்தவன் நீ" என்றும்,

"தம் எதிர் நின்று போர்புரியும் பேரரசர்கள் ஊர்ந்து வரும் போர்க்களிறுகளின் பொன் தொடி அணிந்த கோடுகளை வெட்டி வீழ்த்துவதே குறியாகக் கொண்டு, வென்று வாகை சூடும் வாள் ஏந்துவதால் விழுச்சிறப்புடையாரையே படை வீரர்களாகந் தேர்ந்து பணிகொள்ளும் போர் உணர்வில் கைவரப் பெற்றவன் நீ"என்றும்,

"சேரர் படைமறவர் என்ற சிறப்பினை உணர்த்துவான் வேண்டி, தம் தலையில் சூடிக் கொண்டனவும், பகைவர் உடல் களில் தாம் உண்டாக்கிய புண்களிலிருந்து பீறிட்டுப் புறப்படும் குருதி படிந்து படிந்து, வெண்ணிறம் இழந்து செந்நிறம் பெற்றனவுமாகிய சேரர் தம் பனந்தோட்டுக்கண்ணிகளைப், பிணம் தின்னப் போர்க்கள்த்தே வந்து குவிந்து கிடக்கும், பருந்து கழுகு முதலாம் பறவைக் கூட்டம், ஊன்துண்டங்கள் என்று கருதிக் கவர்ந்து செல்லுமளவு, உன் படைவீரர்கள், அளவின்றி எடுத்து எறிந்த படைக்கலங்களால் பகைவர்களின்

22

22