பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்முழவுகள் தோல் கிழிந்துபோக, அவற்றை அடித்து முழக்கும் பணிமேற்கொண்ட ஏவல் இளையர் அது செய்யமாட்டாமையால் சிந்தை வருந்தும் செருக்களம் சென்று, பகைவர் உயிர் போக்கும் நிலையில், தான் கைப்பற்றக் கருதிய உயிரைத் தப்பாது கவரவல்ல கூற்றுவனுக்கு நிகரான கொடுமையுடையவன் நீ"என்றும் கூறி, ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை முன்னிலைப்படுத்திப் பாராட்டுவார்போல், அவன் பேராற்றலைப் பகைவர்க்கு உணர்த்திப், போர் நிகழாமைக்கு வழிவகுக்கும் பணியோடு, இன்பநுகர் நிலையிலேயே என்றும் இருந்து விடுதல் கூடாது; பெரும்படைத் துணையோடு, பேராண்மை நிலையினையும் போற்றிப் பேணுதல் வேண்டும் என, அவனுக்கு அறம் உரைக்கும் பணியினையும் அழகுற செய்து முடித்தார் புலவர் நச்செள்ளையார்.

நுண் மணல் படிவதினலேயே எளிதில் மறையக் கூடிய, நண்டு நடந்த சுவட்டினை, "மாருதே நாவில்லை சுட்டவடு' என்பது போல், என்றும் மறைய இயல்புடைய சுவடுகளையே குறிக்கத்தக்கதான் வடு என்ற பெயரால் வழங்கிய வனப்புடைமையாலும், நண்டு நடந்த சுவடு எளிதில் மறையக் கூடியதே எனினும், மறையா வடுஎனப் பெயரிட்டு அழைத்தற் கேற்ப, அதை மறைக்கும் வினையையும், அரிது முயன்ற வழியே, பயன்தருவதாகிய அடுதல் எனும் வினையால் கூறிய நயமுடைமையாலும், வடு என்றும், அடுதல் என்றும் வழங்கி அருமையுடைத்து என்பதுபோல் காட்டிய ஒரு தொழிலைச் செய்து முடிக்கும் வினைமுதலைக் கூறுங்கால் காற்றடிக்கக் கலைந்து விடும் மணல் என்றும், அதிலும் நூண் மணல் என்றும் கூறிய மாண்புடைமையாலும், இப்பாட்டிற்கு இச்சொல்லாட்சி நலம் செறிந்த, வடு அடும் நுண் அயிர் என்பதே பெயராய் அமைந்தது நனிமிகப் பொருத்தம் உடைத்து.

23

23