பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஃகுடை வாய்த்தர் நின்படைவழி வாழ்நர், மறங்கெழு போந்தை வெண்தோடு புனைந்து நிறம்பெயர் கண்ணிப் பருந்துாறு அளப்பத் துக்கனே கிழித்த மாக்கண் தண்ணுமை 35 கைவல் இளையர் கையலை அழுங்க, மாற்றரும் சீற்றத்து மாயிரும் கூற்றம் வலைவிரித்தன்ன நோக்கலை; கடியையால், நெடுந்தகை!செருவத்தேனே".

துறை: தும்பை அரவம் வண்ணம்: ஒழுகுவண்ணம் துரக்கு: செந்தூக்கு பெயர் : வடு அடும் நுண் அயிர்

நெடுந்தகை! குடபுலம் முன்னி, போந்தைப்பொழில் அணிப்பொலி தந்து, ஆயிடை மணந்த பந்தர் வேய்ந்து, நெய்தல் கமழ விறலியர் பாடல் சான்று உறைதலின், அண்ணல் மெல்லியன் போன்ம் என உள்ளுவர் கொல்லோ உணராதோர்? ஏறனையை, எஃகுடை வலத்தர் நின்படைவழி வாழ்நர்; கூற்றம் வலைவிரித்தன்ன நோக்கலை; செருவத்தான் கடியையால் எனக்கூட்டிப் பொருள் கொள்க.

இதன் பொருள்: .நெடுந்தகை= பெரிய தகுதிப் பாடுடையவனே! துளங்குநீர் வியலகம் கலங்கக் கால் பொர= அசையும் நீரால் நிரம்பிய பெரிய நீர்ப்பரப்பும் கலங்குமாறு காற்று வீசுவதால். விளங்கு இரும்புணரி உரும் எனமுழங்கும் = வெண்தலைகாட்டி விளக்கமுறத் தே ன் று ம் பெரிய அலைகள் இடிபோல முழங்கும். கடல்சேர்கானல் குடபுலம் முன்னி = கடலைச்சார்ந்த கானற்சோலைகள் மலிந்த குடபுலம் நோக்கிச்சென்று. கூவல் துழந்த தடந்தாள் நாரை = நீர்

25

25