பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுகிக் கவர்ந்து செல்லற்காம் காலத்தை எதிர்நோக்கியிருக்குமாறு. தூக்கண = எடுத்து மேன்மேலும் எறிந்த `கணகன் கிழிந்த மாக்கண் தண்ணுமை - தோலைக்கிழித்து விட்ட கரியகண்ணையுடைய போர்முரசு. கைவல் இ&ளயர் கையளை அழுங்க = அடித்து முழக்கும் இளையோர்களால் தொழிற்படாது கிடந்து அழியுமாறு. மாற்றரும் சீற்றத்து மாயிரும் கூற்றம் = தணித்தற்கு அரிய கடுஞ்சினம் உடைய பெரிய கூற்றுவன். வலைவிரித்தன்ன நோக்கலை = தான் விரித்த வலையில் தான் கவரக்கருதிய உயிரைத் தப்பாதே கவரவல்ல கடுநோக்குடையளுதல் போல், செற்றவர். உயிர் செகுக்கும் சினநோக்கு உடையாய். ஆகவே செருவத்தான் கடியை = ஈண்டு இத்துணை எளியகைத் தோன்றும் நீ. போர்க்களத்தில் மிகவும் கொடியன் ஆகுவை.

28

28