பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சிறுசெங்குவளை

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், சேரநாட்டு அரியணையில் வீற்றிருந்த அதே காலத்தில், தமிழகத்துப் பிறபகுதிகளில் வாழ்ந்து வந்த சில வேந்தர்கள், இவ்வையகத்தில் தம் பெருமையும் பேராண்மையும் மட்டுமே விளங்க வேண்டும். அவ்வேட்கை நிறைவேற வேண்டுமாயின், தம் கடுஞ்சினத்தால் பிறஅரசுகள் கெட்டழிதல் வேண்டும் என்ற பேராசைக்கு அடிமையாயினர். அவ்வாசைக்கு அடிமைப் பட்ட அவர்கள், பரந்து அகன்ற வான்வெளியில், தான் மட்டுமே ஒளிவிட்டு உலாவருதல் வேண்டிக், காயும் கதிர் களைப் பரப்பிவரும் செஞ்ஞாயிற்றின் வடிவத்தையும் வண்ணத்தையும் கொண்ட, தம்வெண்கொற்றக்குடை வழியே தம் ஆசையை வெளிப்படுத்தியதோடு அமையாது. அதை நிறைவேற்றிக் கொள்வான் வேண்டி, ஆடுகோட்பாட்டுச் சேரலாதைேடு பகை மேற்கொண்டனர். அவர் செயல் கண்டு பொருத சேரலாதனும் அவர்மீது போர் தொடுத்து விட்டான். உடனே வெற்றிக்கொடியேந்தி விரையும் விழுச் சிறப்பு வாய்ந்த தன் வேழப்படையும், மணிகள் ஒலிக்கும் மாண்புமிக்க மலைநிகர் தேர்ப்படையும், பெறுதற்கரிய பெரும் பொருள்களைப் பிறநாடுகளிலிருந்து கொணரும் பணிமேற் கொண்டு கடலோடும் கலங்கள், திசைதிரிந்து செல்வதுபோல், வேறு வேறு வழிமேற்கொண்டு விரைந்து சென்று அடையுமாறு முதற்கண்போக்கி, அவற்றின்பின், இடக் கையில் கேடகமும், வலக்கையில், வாள் வேல் போலும் படைக்கலமும் ஏந்திச் செல்வதல்லது, தம் மெய்யைக்காக்கும் கவசம் வேண்டுமே;என்ற கவலை கொள்ளாது, படையின் முன் வரிசைக்கண் புகுந்து, போரிடவல்ல பெருவீரர்களைப்

29

29