பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கல இடமாக மாற்றித் திகழ்ந்தது. அர்சமாதேவி உடன். வர, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆடிடம்புகுந்ததும், முழவு முதலாம் இசைக்கருவிகள் பலவும் ஒருசேர முழங்க, துணங்கை தொடங்கு நிலைபெற்றது. உடனே, அக்கால மரபுப்படியும், அவ்வாடல் முறைக்கு ஏற்பவும், சேரலாதன், துள்ளி எழும் கொல்லேறுபோல் நடந்து சென்று, ஆடல் மகளிர்க்கு ஆடல் துணையாக, அவர் ைக யே டு தன்கையைக் கோத்துக் கொடுத்து, அவ்வாடல் நிகழ்ச்சியில் தன்நெஞ்சு நெகிழ்ந்தவகிைத், துணங்கைக் கூத்தினை தொடங்கி வைத்தான்்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், ஆடல் மகளிரொடு கைகோத்து ஆடல் தொடங்கியதைக் கண்டாள் அரசமாதேவி. மகளிருள், தன்னை மணங்கொண்ட மனைவியைத் தவிர்த்துப் பிறமகளிரைக் கனவிலும் தொடுதல் கூடாது; தன் கணவன், எனக்கருதும் கற்புநெறி கற்றவள் அரசமாதேவி. அதனல், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன், ஆடல் மகளிரோடு கைகோத்து ஆடக் கண்டதும், அது மரபு என்பதையும் மறந்து, கடுஞ்சினம் கொண்டாள், மலர்மாலை அடைய, அழகுத்தேமல் அணி செய்ய, தண்ணெனெக் குளிர்ந்த ஈர்இமைகட்கும் இடைப் பட்ட கண்கள், எக்காலமும் அருள் ஒளியேவீச, அரிவையர்க்கு உரிய அறிவு நலம் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற அரசமாதேவி உள்ளத்தில், அந்நிகழ்ச்சியால் ஊடல் உருப்பெற்று விடவே, மெல்லிய ம ல ரி ன் அகவிதழைஒக்கும், அழகும் மென்மையும் வாய்ந்த, தன்கால்களில் அணிந்திருந்த கிண்கிணிச்சிலம்புகள் கலீர்கலிர் எனக் கடுமையாக ஒலிக்குமாறு, இருந்த இடம்விட்டு வி ைர ந் து எழுந்து, கரைகொல்லும் பெரிய வெள்ளத்தில் அகப்பட்ட மெல்லிய இளந்தளிர்போம் உடல்நடுங்க நின்று, சேரலாதனைக் செறுத்து நோக்கித், தன்கையில் தாங்கி வந்த சிறிய செங்குவளை மலரைச், சினம் மிகுதியால் அவன்மீது எறியக்

31

31