பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 உருபுகிளர் வண்ணம் கொண்ட

வான் தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே',

துறை : குரவைநிலை வண்ணம்: ஒழுகு வண்ணம் தூக்கு: செந்துரக்கு பெயர்: சிறுசெங்குவளை

வங்கம் திசைதிரிந்தாங்கு களிறுமிடைந்து, தே பரப்பி அரணம் எண்ணுது, தோல் எஃகு சுமந்து எழுதரும் ஆடவர், தும்பை விளங்க, பலர்பட, அமர் கடந்த நின் தடக்கை, கவிதல் அல்லதை மலர்பு அறியா எனக் கேட்டிகும்; இனியே, துணங்கைக்குத் தலைக்கை தந்து வருதல் உடன்றனளாகி, அரிவை, நடுங்குவனள் நின்று எறியர் ஒக்கியகுவளை இரப்பவும் ஒல்லாள் பெயர் வோள் கையதைப் பாஅல் வல்லாய் ஆயின; வேந்தர்தம் எயில் யாங்கு வல்லுநையோ? ஏனக் கூட்டிப் பொருள் கொள்க.

இதன் பொருள் : அருங்கலம் தரீஇயர் = தங்கள் நாட்டில் கிடைத்தற்கு அரியவாய பொருள்களை, அவை கிடைக்கும் பிறநாடுகளிலிருந்து கொண்டு வருவதற்காக. நீர்மிசை நிவக்கும்=கடல்மேல் மிதந்து செல்லும். பெருங்கலி வங்கம் = பெரிய ஆரவாரத்தையுடைய கப்பல்கள். திசை திரிந்தாங்கு = திசைமாறித் திசைமாறிச் செல்வதுபோல். கொடிநுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து=போர்க்கொடி பறக்கும் நிலைகளையுடையவாய போர்க்களிறுகள் நெருங்கிச் செல்ல. வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி = தெளிந்த ஒசையினை எழுப்பும் மணிகள் பூண்டநெடிய தேர்களைப் பகைப் புலம் நோக்கிப் போக்குவித்து. மெய்புதை அரணம் எண்ணுது - தம்மெய்யைக் காக்கும் கவசங்கள் அணிவதைக் கருதாதே. மைஅணிந்து எழுதரும் மாயிரும் பல்தோல் = கார்மேகக்

35

35