பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்புகளும் ஒருங்கே உடைய உன் மனைவி. ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடி = ஒள்ளிய நிறம் காட்டும் இதழ்கள் விரிந்த மலரின் அகவிதழ்போலும் தன் மெல்லிய சிறிய அடி களில் அணிந்துள்ள பல்சில கிண்கிணி = சிலவும் பலவுமாகிய கிண்கிணிச் சிலம்புகள். சிறுபரடு அலைப்ப - சிறியகணுவின் கண்கிடந்து ஒலிக்குமாறு. கொல்புனல் தளிரின் நடுங்குவனள் நின்று = கரைகளை அழித்துக் கொண்டு ஒடும் பெருவெள்ளத்தின் இடைப்பட்ட இளந்தளிரேபோல் நடுங்குவாளாய் நின்று. நின் எறியர் ஒக்கிய சிறுசெங்குவளை = உன்மீது எறிய ஓங்கிய சிறிய செங்குவளை மலரை. ஈயென இரப்பவும் ஒல்லாள் = எறியாதே எனக்கு ஈவாயாக என நீ இருகை விரித்து இரக்கவும் அதற்கு இசையாளாகி நீ எமக்கு யாரையோ எனப்பெயர் வேள் கையதை நீ எம்மோடு உறவுடையை அல்லை; நீயாரோ, யான் யாரோ எனக் கூறியவாறே அவ்விடம்விட்டு அகலும் அவள் கையில் உள்ளதான் அக்குவளைமலரை. க து ம் என உறுத்த நோக்கமொடு பாஅல் வல்லாய் ஆயினை நீ = விரைந்து சென்று, செறுத்துநோக்கிக் கைப்பற்றிக் கொள்ளமாட்டாதான்் ஆகிவிட்டன; அ த் த ைக .ே யா ளு கி ய நீ. அகல் இரு விசும்பில் = அகன்ற பெரிய வானத்தின்கண். பகல் இடம் தரீஇயர் பகற்காலம் ஒன்றிற்கே இடம் உண்டாதற் பொருட்டு, தெறுகதிர் திகழ்தரும் உருகெழு ஞாயிற்று = கொடிய வெப்பம் பொருந்திய கதிர்களைப்பரப்பும் செந்நிறம் காட்டும் ஞாயிற்றினுடைய உருபு கிளர் வண்ணம் கொண்ட = வடிவையும் விளங்கும் வண்ணத்தையும் கொண்ட. வெண்குடை வேந்தர் தம் எயில் = வெண்கொற்றக் குடையுடையவர்களாகிய வேந்தர்களுக்கு உரிய அரண்களை. பாஅல்யாங்கு வல்லுநையே = வென்று கைப்பற்ற எவ்வாறு வன்மையுடையை ஆகுவையோ? அறியேம், வாழ்க நின் கண்ணி நின்தலைமாலை வாழ்வதாக. - -

37

37