பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழிடம் வந்து வீழ்ந்தாரை வலிதிற்பற்றி அழிக்கும் ஆற்றல் வாய்ந்த முதலைகள் வாழும் ஆழம்மிக்க அகழியும், வல்வில் பொறியும், கருவிரல் ஊகமும், கல் உமிழ்கவணும் போலும் எந்திரப் படைகள் அமைக்கப் பெற்ற வாயிலும் கொண்ட டிருந்தது அவ்வரண். அதுமட்டுமன்று; அது அத்தகு அமைப்பு உடைமையால் அதைக் கைபற்றக் கருதுவார் ஒருவரும் இரார்; ஒருகால், அதன் அமைப்பாற்றல் அறியாது, அதைக் கைப்பற்றும் கருத்துடையராய் வருவார் எவரேனும் உளராயின், அவர் தோற்பது உறுதி, ஆகவே அமரில் தோற்று ஆண்மை இழக்கும் அவரைப், பெண்மை யுடையவராகக்கொண்டு, அவர்க்கும் பெண்டிர் அணியாம் சிலம்பைக் காலில்கட்டி, தழை ஆடையை இடையில் உடுத்திப் போக விடுவோம் என்ற அரணகத்தாரின் தறுகளுண்மையினைப் புலப்படுத்த, வாயில் முகப்பில் கட்டி நாலவிட்ட சிலம்பும் தழையும் அரண்நோக்கி வருவாரை வரவேற்றுக் கொண்டிருப்பதையும் கண்டார் காக்கைப் பாடினியார். -

ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் படைபோகு இடை வழியில், அதுகாறும் அழிவுருது, அத்துணை அமைப்பு நலனோடு காட்சி நல்கும் இவ்வரணுக்கு உரியார் யாராய் இருத்தல் கூடும் என வியந்து நின்று எண்ணிப் பார்க்கவே புலவர்க்கு உண்மை புலயிைற்று. அவ்வரண், அப்போது அவ்வரண்கத்தே வாழ்பவன், தன் ஆற்றலால் பெற்றது அன்று. ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் முன்னேர்களுக்கு அடங்கிய அரசாகவும், அவர் அன்பைக் கவர்ந்த அரசாகவும் வாழ்ந்தமையால், அவர்களால் அன்பளிப்பாக அளிக்கப் பெற்று, பிற எப்பகைவராலும் பாழுரு வண்ணம் காக்கப் பெற்றது அது. சேரர் குலத்தவரின் சிறந்த துணை அதற்கு உளது என்ற உண்மை உணராது, அதைவென்று கைப்பற் ற

42

42