பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்த ஒருவனையும், முன்னேர் சென்ற நன்னெறி போற்றும் நல்லியல்புடைமையால் அழித்து, அவ்வரண் அழிவை, ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் தடுத்து அளித்துள்ளான்.

அவ்வரணின் இவ்வரசியல் உரிமையை உணர்ந்தமை. யால் அவ்வரணின் நல்வாழ்வில் நாட்டம் சென்றது புலவர் நச்செள்ளையார்க்கு. ஆனால், தனக்கும் அவ்வரனுக்கும் உள்ள அ வ் வு ற வி னே ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அறிவான்; அவன் படைவரிசையின் முன்னணியில் வீறு கொண்டுவரும் அ வ ன் வேழப்படை அதை அறியாது. அதல்ை, அவ்வரணையும், மரப்பலகைகளை இரண்டும் பலவுமாக இணைத்து, இரும்பு ஆணிகள் கொண்டு இறுகப்பிணித்து, ஆக்கப்பெற்று பின்னே கணையமரம் நின்று தாங்க, வாயிலை அடைத்து நிற்கும் கதவினையும் கண்டுவிட்டால் அக்களிறுகள் அடங்கியிரா, அந் நிலையே மதம்பட்டு, போர் வெறிகொண்டு விரைந்துதோடி அழித்துவிடும் என்பதை உணர்ந்தமையால், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் படை வரிசையின் முன்னே வந்து கொண்டிருந்த புலவர், அப்படை நடுவே, நெடுந்தேர்மீது அமர்ந்துவரும் சேரலாதன்பால் சென்று, வேந்தே! அதோ காண், ஒர் அரண் தோன்றுகிறது. அது, உன்முன்னேரால் அளிக்கப்பெற்று, உன் ல்ை காக்கப்பெறும் ந ட் ப ர ச ர் அரணுகும். ஆகவே, அது அழிவுற்றுப் போகாது, நின்று நிலைபெறுவதில் உனக்குப் பெரும்பொறுப்பு உண்டு. ஆனால், அது, உன் களிற்றுப் படையின் கண்களில் பட்டுவிட்டால், அது பாழுற்றுப் போய்விடும். ஆகவே, அவ்வரண் நிற்கும் இவ்வழிச் செல்வதை விடுத்து, வேறுவழி மேற்கொள்வாயாக. தலைநகர் சென்று சேர, அது, சற்று வளைந்து கிடந்து தொலைவுடையதாயினும், அவ்வழி மேற்கொள்வதே நன்று. உடனே, அதற்காம் ஆணையை இப் போது விடுவாயாக!' என வேண்டி,

43

43