பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குபூஉ நிலைப் புதவின் கதவுமெய் காணின், தேம்பாய் கடாத்தொடு, காழ்கை நீவி; வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல் ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி, 20 மேம்படு வெல்கொடி நுடங்கத்

தாங்கல் ஆகா, ஆங்கு நின் களிறே’’

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம்: ஒழுகு வண்ணம் து.ாக்கு: செந்துரக்கு பெயர்: குண்டு கண் அகழி

குரிசில் கலம் தரீஇயர் இறுத்து, அவர் திறை கொடுப்ப அருளி, மூதூர் செல்குவை ஆயின், இடைவழிக்கண் இதோ நிற்கும் இவ்வரண், நின்னில் தந்த எயிலும், முன்னேர் ஒம்பிய எயிலும் ஆம்; அ த ன் கதவுகாணின், நின்களிறு தாங்கல் ஆகா; ஆகவே, முகப்படுத்தல் யாவது? வளையினும் பிறிதாறு சென்மதி எனக் கூட்டுக.

இதன் பொருள்: சினங்கெழு குரிசில் = சினம் மிக்க சேரலாதனே! வென்று கலம் தரீஇயர் = பகை வளர வென்று அவர் செல்வங்களைக் கொண்டு வருதற்காக. வேண்டு புலத்து இறுத்து = அவ்வினை குறைவற நிறைவேறுதற்கு ஏற்ற இடத்தே சென்று தங்கி. அவர் = அதுகண்ட அப்பகைவர். நல்கினை ஆகுமதி எம்என்று = எம்மைக் காத்து அருள்புரிவாயாக என்று கூறி. வாடா யாண ர் நாடு திறை கொடுப்ப = வற்ருத வளம் செறிந்த தங்கள் நாட்டுப் பொருள்களைத் திறையாகத்தர. அருளி = அதுகொண்டு அருள் அளித்து. கல்பிறங்கு வைப்பின் = மலைகள் மலிந்த நாட்டில். கடறு அரையாத்த = காவற்காடு சூழ்ந்த நின்

45

45