பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்புகழ் மூதூர் செல்குவை ஆயின் = உன்னுடைய பழம். பெரும் புகழ்வாய்ந்த தலைநகராம் மூதுார்க்கு மீண்டுசெல்குவை யாயின். செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை தூங்கும் க சித்திர வேலைப்பாடுகள் விளங்கச் செம்பொன்னுல் செய்யப் பட்ட சிலம்போடு, அழகிய தழை ஆடையும் கட்டி நாலவிட்டிருப்பதும். எந்திரத் த ைக ப் பி ன் அம்புடை வாயில் = எந்திரப் பொறிகளில் வைத்து எறியப்படும் அம்புகள் போலும் அரிய பொறிப்படைகளையுடையது மாகிய வாயிலும். கோள் வல் முதலைய குண்டுகண் அகழி = அகப்பட்டாரைப் பற்றிக் கொல்லவல்ல முதலைகள் வாழும் ஆழம் மிக்க அகழியும். வானுற ஓங்கிய வளைந்து செய்புரிசை = வானளாவ உயர்ந்து வளைந்துவளைந்து போகுமாறு ஆக்கிய மதிலும் (ஆகிய உறுப்பு நலம் உடையதுமாய் அதோ தோன்றும் அரண்.) ஒன்னுத் தெவ்வர் முனைகெடவிலக்கி நின்னில் தந்த மன்எயில் - மனம் ஒன்று படாத பகைவர் வந்து வளைத்துப் போரிட அப்போரை அழித்து, உன்னல் காக்கப்பெற்ற அ ழி யா அரணுகும். அல்லதை = மேலும். முன்னும் பின்னும் நின் முன்னேர் ஒம்பிய எயில் = உன் முன்னேர்கள், முன்னும் பின்னுமாகப் பலமுறை காத்துநிறுத்திய அரணுமாம். எழஉப் புறம் தரீஇ = கணையமரத்தால் பின்புறம் காக்கப்பெற்று. பொன்பிணிப் பலகை = கரும் பொன்னகிய இரும்பு ஆணிகளால் இறுகப் பிணிக்கப்பட்ட பலகைகளால் ஆகிய குழஉ நிலைப்புதவின் கதவு மெய்காணின் = பல்வேறு நிலைகளையுடைய கோட்டை வாயிற்கதவுகளைத் தெளிவாகக் கண்டுவிட்டால். தேம்பாய் கடாத்தொடு = வண்டுக் கூட்டம் வந்து மொய்க்கும் மதநீர் பெருக்குவதோடு, கா ழ் ைக நீ வி = குத்துக்கோலையும் மதியாது கடந்து. வேங்கைவென்ற பொறிகிளர் புகர்நுதல் =

வேங்கைப்புலியையும், வேங்கை என மருண்ட வேங்கை மரத்தையும் வென்று அழித்தலால் உண்டான வடு விளங்கும் புள்ளிகள் பொருந்திய நெற்றி வரையும். ஏந்து கை சுருட்டி

46

46