பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= உயர்த்திய துதிக்கையைச் சுருட்டி, தோட்டிநீவி = தன்னை அடக்க உதவும் தோட்டியையும் கடந்து. மேம்படு வெல்கொடி நுடங்க கபோரில் வென்று உயர்த்திய, தன்மீது நின்று பறக்கும் வெற்றிக்கொடி படபடக்க விரைந்து. நின் களிறு = உன் போர்க்களிறு, ஆங்குத் தாங்கல் ஆகா = அதை அழிக்குமாதலின், ஆங்கு அதைத் தடுத்து நிறுத்துவது ஆகாதாகிவிடும். (ஆகவே) எயில் முகப்படுத்தல் யாவது = உன்படையை அவ்வரண் நோக்கிப்போக விடுவது யாதாய் முடியும். வளையினும் = இது த வி ர் த் த வேறு வழிகள் வளைந்து வளைந்து செல்லுமாயினும். பிறிதாறு சென்மதி = அவ்வேறு வழிகளையே மேற்கொண்டுசெல்வாயாக!”

அரண்மனைக் கருவூலம் வறண்டு, வந்து இரப்பார்க்கு வாரி வழங்குவது தடைபட்டுப் போகும் நிலை ஏற்படாமை குறித்தே, அரசர்களும் வீரர்களும் பிறநாடு மீது படையெடுத்துச் செல்வர். ஆங்குப் பகைமன்னர், அஃது அறிந்து திறைதந்து பணிந்து போவராயின், அதுகொண்டு, அவர் நாட்டை அவர்களே ஆளவிடுத்து மீள்வர். பண்டைப் போர்க் காரணங்களுள் ஒன்ருன இதை, "வென்று கலம்தரீ இயர் வேண்டுபுலத்து இறுத்து அவர் வாடாயாணர் நாடு திறை கொடுப்ப நல்கினையாகுமதி எம்மென்றருளி' என்ற இப்பாட்டின் வரிகள் உணர்த்தி நிற்கின்றன. இதற்கான இலக்கியச் சான்றுகள் எண்ணற்றன. உள. ஒரு சில இதோ:

"வேந்து தந்த பணி திரையால் சேர்ந்தவர் கடும்பு ஆர்த்தும்’’. "பிணிக்கதிர் நெல்லின் செம்மல் முதுார் நுமக்கு உரித்தாகல் வேண்டின் சென்று அவற்கு இறுக்கல் வேண்டும் திறையே'. "யாம் தன் இரக்கும் காலைத் தான்்எம்

47

47