பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்ணுமருங்குல் காட்டித் தன் ஊர்க்

கருங்கைக் கொல்லனே இரக்கும்,

திருந்தலை நெடுவேல் வடித்திசின் எனவே’’. என்ற புறநானூற்று வரிகளை 122, 97, 180 ) காண்க.

கோட்டை மதிற்கண், பல்வேறு பொறியியல் படைக் கலன்களைப் பொருத்தி வைப்பதோடு, அரண் கோடல் போரில் தோற்றுப் பின்னிடும் பகைவீரர்களை, மகளிர்கோலம் கொள்ளப் பண்ணிப் பழித்தற்காக, மகளிர் உடுக்கும் தழையாடை, அணியும் காற்சிலம்பு, ஆடி மகிழும் பந்தும், பாவை யும் போலும் பொருள்களை வாயிற்கண் தோரணமாகக் கட்டி நாலவிடுவது பழங்கால வழக்காறு என்பதை உணர்த்தும் செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை துரங்கும் எந்திரத்தகைப்பின் அம்புடை வாயில்’ என்ற இப்பதிற்றுப்பத்து வரிகளோடு 'செருப்புகன்று எடுத்தசேண் உயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை துரங்க' என்ற திருமுருகாற்றுப்படை வரிகளும் (67.68) ஒத்து இருப்பது காண்க.

48

48