பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 ஏவல் வியங்கொண்டு இளையரொடு எழுதரும்

நல்லார் யானைகாணின், நீல்லாத்தான்ை இறைகிழவோயே! '

துறை: காட்சி வாழ்த்து வண்ணம்: ஒழுகு வண்ணம் நாக்கு: செந்துாக்கு பெயர்: நில்லாத் தான்ே

புலம் படர்ந்து, முரசம் சிலைப்ப, நாமம் செய்ம்மார் எழுதரும் ஒல்லார் யானை கானின் நில்லாத்தான்ே இறைகிழவோய் வள்ளியை ஆ த லி ன் காண்கு வந்திசின்; விறலியர் மறம்பாட, நன்கல வரைவில வீசி, அனையை ஆகன்மாறு; அனையது உம் உயர்நிலை உலகத்துச் செல்லாது நெடிது மன்னியரோ, உள்ளியது முடித்தி! வாழ்க கண்ணி! என முடிக்க.

இதன் பொருள்: நிலம்தப இடூஉம் ஏணிப்புலம் படர்ந்து = பகைவர்க்குரிய நிலப்பகுதி குறைபடுமாறு, அவர் எல்லைக்கு உட்பட்ட இடத்தே சென்று பாசறை அமைத்து. படுகண் முரசம் நடுவண்சிலைப்ப = பேரொலி எழுப்பும் கண்ணையுடைய போர்முரசு. அப்பாசறை நடுவே இருந்து முழங்கிற்ருக. தோமரவலத்தர் = அது கேட்ட அளவே தண்டேந்திய வலக்கையினராய். நாமம் செய்ம்மார் = பகைவர்க்கு அச்சம் தரும் போரினைச் செய்தற் பொருட்டு, ஏவல்வியம் கொண்டு = படையெழுச்சி அறிவிக்கும் அம்முரசின் முழக்கினையே, மன்னர் ஏவலாகக் கொண்டு போருக்கு எழும். இளையரோடு எழுதரும் - இளம் வீரர்களோடு போர்க்களம் நோக்கிப் போகும், ஒல்லார்யானை காணின் = பகைவரின் யானைப் படையினை கண்டால், நில்லாத் தான்ே = அடங்கியிராது

53

53