பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. துஞ்சும் பக்தர்

'யாண்டு பல ஆகவும் நரை இல ஆகுதல் யாங்கு ஆகியர்?' என வியந்து கேட்டார்க்கு விடையளிக்குங்கால், புலவர் பிசிராந்தையர், தம் மனைவியரின் மனையற மாட்சி. வினையே தலையாய காரணமாகக்கொண்டு முதற்கண் கூறி, புள்ளார். 'மனமாட்சி இ ல் லா ஸ் கண் இல்லாயின், வாழ்க்கை என மாட்சித் தாயினும் இல்'; ' இல்லது என் இல்லவள் மாண்பாள்ை'-நல்ல மனைவியர்க்கு வள்ளுவர் வழங்கும் நற்சான்றுரைகள் இவை, ஆகவே, எத்துணைப் பெரிய வாழ்வினராயினும், அவர்தம் மனைவிமார் மாண்பில. ராயின், அவர் வாழ்க்கை ப ய ன் மி கு வாழ்க்கையாக அமையாது. 'புகழ் புரி ந் த இல் இலோர்க்கு இல்லை, இகழ்வார்முன் ஏறுபோல் பீடுநடை' என்றார் வள்ளுவர். ஆகவே, மனையற மாட்சிமிக்க மனைவியரைப் பெறுவது மன்னர்க்கும் இன்றி அமையாததாகும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்கு அம்மனையறச்செல்வம் குறைவறப் பொருந்தி யிருந்தது. 'கற்பும் க | ம மும், நற்பால் ஒழுக்கமும், மெல்லியற்பொறையும், நிறையும், வல்லிதின் விருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும், பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்' எனத் தொல்காப்பியர் கூறும் குணநலம் அனைத்தையும் கொண் ட | ள மனைவியாகப்பெற்று, "அத்தகையாள் கணவன்' என வழங்கத்தக்க அளப்பில், பெருமைக்கு உரியவய்ை விளங்கினன்,

வீட்டில் அமைதிகாப்பவள் மனைவி என்றால், நாட்டின் அமைதி காப்பவர் ஆன்ருேர் பெருமக்களாவர். 'அதன்கடை,

சான்ருேர் பலர் யா ன் வாழும் ஊரே எனக் கூறிய

55

55