பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடுத்து வருவாரின் வாட்படை முதலாம் படைக்கலங்கள் அனைத்தையும் பாழ்செய்து துரத்துவன். அத்தகைய உரமும் ஊக்கமும் நிறைந்த உள்ளம் உடைமையால், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், அக்காலத்தில் சிறந்த வீரர்கள் எனப் பாராட்டப் பெற்றவர்களாகிய மழவர்களையும், குடவர்களையும் வென்று பணி கொள்ளும் பேறுடையணுகவும் வாழ்ந்திருந்தான்்.

வளம்மிக்க நாடும், வன்மைமிகு ஆற்றலும், மாண்புமிகு மனைவியும், பண்புமிகு பெரியோரும் ஆகிய அனைத்து வகை யாலும் சிறந்து விளங்குவதிலேயே, ஒருவன் வாழ்வு, பயன் நிறை வாழ்வாகி விடாது. 'ஈதல் இசைபட வாழ்தல்', உரைப்பார் உரைப்பவை எல்லாம், இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ்' என ஈகையால் வரும் புகழ்பெற்று வாழ்வதே வாழ்வின் பயனும் என்றார் வள்ளுவர். ஆகவே, அவ்வாறு பெருவாழ்வு வாழ்பவர், வறுமையில் வாடுவார் தம் பெரும்பசி போக்கும் பேரற நெறியிலும் நிற்றல் வேண்டும். அதுவே அவர் வாழ்வின் பயம்ை. அவர் வாழ்வே பயனுடை வாழ்வாம். இவ்வுண்மையையும் உணர்ந்திருந்தமையால், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன், தன் அரசப் பெருங்கோயிலின் வாயிற்கண் வந்து நிற்கும் இரவலர்களின் வறுமைப்பிணி போக்கும் பெரும்பணியை, நாள்தோறும் விடாது மேற். கொண்டு வந்தான்். தன் நாடு செல்வத்தில் சிறந்து விளங்கினமையால், வறுமையுற்று இரப்பவர் அருகிவிட்ட காரணத்தால், இரவலர் வாராத நாட்களில், தன்பொற். றேரைப் பிறநாடுகளுக்குப் போக்கி, வளம் இழந்த அந்நாடு களில் கிடந்து வருந்தும் வறியோர்களைத் தேரேற்றிக் கொணர்ந்து, முதற்கண் அவர்தம் வயிறுகாய் பெரும்பசி போக்கிப் பின்னர், அவர் வேண்டும் வாணிதிகளை வழங்கி, மீண்டும் தேர்மீதே கொண்டு சென்று விடுவன். -

57

w i.

57