பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், இவ்வாறு அனைத்து வகையாலும் சிறந்து விளங்குகிருன் என்பதால் அவன் பால் பேரன்புகொண்டு அவனைக் கானும் ஆர்வம் வந்த, அவன் நாடடைந்த புலவர், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் கொடைத் தொழில் அளவின்றிப்போவதைக் கண்டார்.

இரப்பவர் எது கேட்பினும் கொடுப்பது, எவ்வளவு கேட்பினும்

கொடுப்பது எனக், கொடுத்தமையால் கெட்டு அழிந்தவர் பலராவர். அவ்வாறு வரையறையின்றி வழங்கி வந்தால்,

வானளாவ உயர்ந்த மாநிதியும் குறைந்து விடும். அதனுல்

அவன் வாழ்நாளின் இறுதிநாட்கள் வழங்குவதற்று வனப்

பிழந்து போய்விடும். இரவலர்களும், பேனுவார்.அற்றுப் பசிநோயுற்றுப் பாழுற்றுப்போவர் என உணர்ந்தார் புலவர். உணர்ந்த புலவர், தம் உணர்வை உள்ளத்திற்குள்ளேயே

அடக்கிக் கொண்டிராது, ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை அடைந்து, " அ ர .ே ச! உன்பெருமையெலாம் கேட்டு,

உன்னைக் காணவந்துளேன்யான். இன்று நீ பெற்றிருக்கும்

இப்பெருவாழ்வு என்றும் நின்று நிலைபெறவேண்டும் எனத்

துடிக்கிறது எம் உள்ளம். கடலில் படிந்து, பெருநீர்பருகி,

கார்நிறம் பெற்று, வானிடை எழுந்து பெருமழை பெய்த

கார்முகில், பின்னர்த், தன்னிடையே இருந்த தண்ணி

ரெல்லாம் தீர்ந்து போனமையால் வெண்முகிலாகி விரும்புவார் அற்றுப் போய்விடுவதுபோல, உன் வாழ்நாளில், கழிந்தது

போக உள்ள நாட்கள், வழங்கி வாழும் வான்பயன் அற்ற

வீண்நாட்களாகக் கழிதல் கூடாது என விழைகிறது என்

உள்ளம். ஆகவே, அதற்கேற்ற வகையில், உன் வாழ்க்கை

முறைகளை வகுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்' என

அறம் உரைத்து ஆகும்நெறி காட்டினர்.

பெயர்த்தெடுக்கமாட்டாது குவிந்து கிடக்கும் செல்வங்கள் மலிந்த பண்டக சாலையின் பெருமை கூறவந்த புலவர்,

58

58