பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வங்கள் தேங்கிக்கிடப்பதை, கிடப்பதாகிய உறக்கம் எனும்பொருள் உணர்த்தும், துஞ்சுதல் எனும் தொழிலால் உணர்த்திய சிறப்பால், துஞ்சும் பந்தர் என்ற அ த் .ெ த | ட .ே ர, இப்பாட்டிற்குப் பெயராய்

அமைந்துளது.

55. ஆன்ருேள் கணவ! சான்ருேர் புரவல!

10

15

20

நின்நயந்து வந்தனென்; அடுபோர்க் கொற்றவ! இன்னிசைப் புணரி இரங்கும் பெளவத்து, நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க் கமழும் தாழைக் கானலம் பெருந்துறைத் தண்கடற்படப்பை நன்னுட்டுப் பொருந! செவ்வூன் தோன்ரு வெண்துவை முதிரை வாலுன்வல்சி மழவர் மெய்ம்மறை! குடவர்கோவே கொடித்தேர் அண்ணல்! வாராராயினும் இரவலர் வேண்டித், தேரில் தந்து அவர்க்கு ஆர்பதன் நல்கிடும் நசைசால் வாழ்மொழி இசைசால் தோன்றல்! வேண்டுவ அளவையுள் யாண்டுபல கழியப், பெய்து புறம்தந்து பொங்கல் ஆடி, விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் சென்று அருலியரோ, பெரும! அல்கலும் நனந்தலை வேந்தர் தார்அழிந்து அலற நீடுவரை அடுக்கத்த நாடுகைக் கொண்டு பொருது சினம் தணிந்த செருப்புகல் ஆண்மைத், தாங்குநர்த் தகைத்த ஒள்வாள் - ஓங்கல் உள்ளத்துக் குருசில்! நின்நாளே!” துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு: செந்துாக்கு

பெயர்: துஞ்சும் பந்தர்

59

மெய்ம்மறந்து வீழ்ந்து

59