பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்னும் உணவினை நளிமிகக் கொடுக்கும். நகைசால் வாழ்மொழி = கேட்டார் பிணிக்கும் இன்சொல்லே வழங்கும். இசைசால் தோன்றல் - புகழ்பெற்ற தலைவனே! பெரும = பெருமானே! ந ன ந் த லே வேந்தர் = பெருநாடு ஆளும் பேரரசர்கள். அல்கலும் தாள் அழித்து அலற = நாள்தோறும் தம்துசிப் படைஅழியக் கண்டு ஆற்ருது புலம்புமாறு, நீடுவரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு = பெரியமலைப்பக்கத்தைச் சேர்ந்த அவர்நாட்டின் பகுதியைக்கைக்கொண்டு. பொருது சினம் தணிந்த செருப்புகல் ஆண்மை = போரிட்டுத் தீர்ந்தமையால் அவர் பால் கொண்ட சினம் தணியப் பெற்ற போர்விரும்பும் பேராண்மையினையும், தூங்குநர் தகைத்த ஒள்வாள் = அறியாதுவந்து எதிர்த்தவர்களை அழித்தொழித்த ஒளிவீசும் வாட்படையினையும். ஓங்கல் உள்ளத்துக் குருசில் * உயர்ந்த உள்ளத்தையும் உடைய குருசிலே! நின்நயந்து வந்தனென் - உன்னை விரும்பி உன்பால் வந்துளேன் யான். வேண்டுவ அ ள ைவ யு ள் யாண்டு பலகழிய = உனக்கு வேண்டும் ஆண்டுகள் என அறிந்து உனக்கு வகுத்த உன்வாழ் நாளில் பல ஆண்டுகள் கழிந்துபோக. நின்நாள் = உள்ள உன்வாழ்நாட்கள். .ெ ப ய் து புறம் தந்து = முதற்கண் பெருமழை பெய்து உலகத்து உயிர்களை ஒம்பி, பொங்கல் ஆடி = பின்னர்ச்சிறுசிறு பிசிராசிப் பரந்து. விண்டு சேர்ந்த வெண்மழை போல=மலையை அடைந்து பயற்றுப் போகும் வெண்முகில் போல. சென்று அருலியர் = பயன்இன்றிக் கழிந்து விடாவாகுக. .

பாணர் போலும் இரவலர்கள் தம்மைத் தேடிவந்து தம் வாயிற்கண் நின்று பொருள் வேண்டும் நிலைவாய்க்காத போது புரவலர்கள், அவ்விரவலர்களைக் கூவி அழைத்துப், பொருள் வழங்குவர் என்பது மதுரைக்காஞ்சி வரிகளாலும் உறுதியாதல் காண்க:

61

61