பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொற் பூண் விளங்கும் கையில் பெரிய வாள் ஏந்திக் களம் புகுந்து, தன் ஆற்றல் அறியாது தன்னேடு பகை கொண்டு போர் தொடுத்து வரும் வேந்தர்கள் மீது பாய்ந்து போரிட்டு, அவர்கள் இவ்வுலக வாழ்வை மறந்து, அவ்வுலக வாழ்வைப் பெறுமாறு, அவர் உடல்களே வெட்டிச் சாய்த்து விட்டு, அவ்வெற்றிக் களிப்பால், போர்க்களத்தின் இடையே, தன் பொற்றேர் மீது நின்று, வாளை உயரத் தூக்கியவாறே, போர் முரசின் முழக்கிற்கு ஏற்ப ஆடுவதில், இவனுக்கு நிகர் இவனே. இவன் ஆடப்பிறந்த ஆடல் அது; அதில் வல்லன் இவன். இதில் வல்னல்லனுதல் இவனுக்கு இழிவு தருவதாகாது. ஆகவே, இவன் வாழ, இவன் கண்ணி வாழ யானும் வாழ்த்துகின்றேன்; நீங்களும் வாழ்த்துங்கள்!” எனக் கூறி, இழித்தும் பழித்தும் உரைத்த அவர் வாய்கள், அவனே வாழ்த்த வழிவகுத்து, மன்னன் மானத்தைக் காத்தார்.

வேந்தர்கள் மெய் மறத்தலாவது, இவ்வுலக வாழ்வு இழத்தலே ஆயினும், நிலையில்லாத இவ்வுலக வாழ்வு இழந்த அவர்கள், அதன் பயனுய் அடையப் போவது, நிலைபேறுடைய அவ்வுலக வாழ்வு ஆதலின், வேந்தர்கள் மெய்ம் மறத்தலான் வரும் இறப்பின. வாழ்ச்சி எனும் பெயர் கொடுத்து அழைத்த சிறப்புடைமையால் வேந்தர் மெய்ம் மறந்த வாழ்ச்சி என்ற தொடரே, அச்செய்யுட்குப் பெயராய் அமைந்துளது. -

56 'விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண், கோடியர் முழவின் முன்னர் ஆடல் வல்லான் அல்லன்; வாழ்க அவன் கண்ணி ! இலங்கும் பூணன், பொலங்கொடி உழிஞையன்

5 மடம் பெருமையின் உடன்று மேல்வந்த

வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி - விந்துகு போர்க்களத்து ஆடும் கோவே'.

04

64