பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சில்வனை விறலி

ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் கொடைப் புகழ் கேட்டு, அவன்பால் பேரன்பு கொண்ட புலவர் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார், வேறுசில விறலியர்களையும் உடனழைத்துக் கொண்டு சேரநாட்டுத் தலைநகர்க்கு வந்து சேர்ந்தார். சேரலாதனைக் கண்டு பரிசுபெறும் பெருவேட்கை யுடையராய் வந்த புலவர்க்கு, ஆங்குப் பெரியதொரு ஏமாற்றமே காத்துக் கிடந்தது. அரண்மனையில், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இல்லை. தலைவாயிற் காவலனை அணுகி வினவ, அவன், 'வாகை பலசூடி, வெற்றிவிழாக் கொண்டாடி, அதற்கு அறிகுறியாகத் துணங்கைக் கூத்தாடிய எம் கோமான், எம்மை வெல்பவர் இவ்வையகத்தில் இலர்' என வஞ்சினம் வழங்கிச் செருக்கித் திரியும் அரசுகளும் சில உளவாதல் அறிந்து, அவர்தம் ஆணவம் அடங்கச் சென்று, அவர் உடற்புண் சொரியும் செங்குருதி வெள்ளத்தால், தன் பனந்தோட்டுக் கண்ணியும், வீரப் பொற்கழலும் செந்நிறம் பெறுமாறு கடும்போர் நிகழ்த்தும் களத்தில் உள்ளான். ஆண்டுச் சென்று காண்மின்” என்றனன்.

காவலன் உரைத்தது கேட்டுக், காக்கைப் பாடினியார் பெரிதும் கவலைக்கு உள்ளானர். அத்துணைத் தொலைவு கடந்து சென்று அவனைக் காண்பது அவரால் ஆகாது. ஆனால், உடன் வந்திருக்கும் விறலியர்களின் வறுமை எவ்வாருயினும், ஆண்டுச் செல்க எனத் தூண்டுவதாயிருந்தது. ஆதல்ை, ஆடல் துறைக்கு வேண்டும் ஒரு சில வளைகளையே அணியக்கற்ற, அத்துணை இளையவராகிய அவ்விறலியர், வயிறுகாய் பசியோடு, வழிநடை வருத்தத்திற்கும் உள்ளாகி, நனிமிக

66

66