பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருந்துவர் என்ருலும், வறுமையின் கொடுமை, அது தீர்க்கும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்பால் செல்லத் துரத்தவே, "விறலியர்காள்! செல்லும் வழிகள், புல் நிறைந்தும் பரல் மறைந்தும் மெத்தென்றே இருக்கும். அவ்வழியில் விரைந்து ஓடாது பையப் பைய நடந்து சென்றால், வழிநடை வருத்தம் தோன்ருது. அ வ் வ ழி ச் சென்று, ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் கண்டு, தம்மிடையேயிருந்து எழும் இன்னெலி கேட்கும், ஆறலைகள்வர்போலும் .ெ கா டி ய வ ர் க ளி ன் வாள்பிடித்த கைகளையும் வணங்கப்பண்ணும்பெருமை வாய்ந்த நரம்புகளைக்கொண்ட பேரியாழில், குரல் என்னும் நரம்பினை மீட்டி, பாலைப்பண்ணை எழுப்பி, அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஒச்சா, அவன் கழிதறுகண்மையைப் பொருளாகக் கொண்டபாடலைப் பாடிப் பரிசில்பெறச் செல்வோம் வருதிரோ?' என்று மெல்ல வினவினர்.

சேரநாட்டின் தலைநகர் வந்து சேர்வதற்கே அவ்விறலியர் பெரும்பாடுபட்டு விட்டனர். அந்நிலையில், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பாசறை கொண்டிருக்கும் பகைப்புலம் சென்று சேர்வது தம்மால் இயலுமோ? என்ற முடியாமை ஒரு புறம் இருக்க, பகைவெல்லும் உள்ளம் உடையணுய்ப் பாசறை வாழ்க்கை மேற்கொண்டிருக்கும் அவன், ஆங்கடையும் தமக்குப் பரிசில் அளிப்பனே என்ற ஐயமும் ஒருபால் எழவே, வாய் திறந்து விடைமொழி தாராது வாளா இருந்தனர். ஆனால், முகக்குறிப்பால் அகக்குறிப்பறியும் மூதறிவு படைத்த நச்செள்ளையார், அவர் உள்ளக் க ரு த் ைத உணர்ந்து கொண்டார். அதனல், விறலியர்காள் சென்றால் அவன் பரிசில் தருவனே என்ற ஐயம் உங்கட்குவேண்டாம். அவனை யான் நன்கு அறிவேன். மனைமாட்சியின் நன்கலம், பெறத் தக்கபேறுகளுள் தலையாயபேறு,என்றெல்லாம் பாராட்டத்தக்க மக்கள் செல்வத்தைத் தந்தவர், என்ற சிறப்போடு, பொன்

67

67