பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளித்துப் பரவும். புலவுக் களத்தோன் = புலால்நாறும் போர்க்களத்தில் உள்ளான். இ ள ம் து னை ப் புதல்வர் = இளமையும், முதுமைப் பருவத்தில் துணையாம் தன்மையுடை. யாருமாகிய புதல்வர்களாம். நல்வளம் பயந்த = நல்ல செல்வத்தைப் பெற்றளித்தவரும். வளங்கெழு குடைச்சூல் = வளம் பொருந்திய பொன்னல் செய்த சிலம்பையும். அடங்கிய கொள்கை = அடக்கம் முதலாம் ஒழுக்க நெறிகளை யும், ஆன்ற அறிவின்=நிறைந்த அறிவினையும். தோன்றிய நல்லிசை - பலரும் ப ா ர ட் டு ம் பெரிய புகழையும். ஒண்ணுதல் - ஒளிவீசும் நெற்றியையும் உடையவரும் ஆகிய. மகளிர் = மனைவியரின். து னி த் த கண்ணினும் = ஊடல் கொண்டு உறுத்து நோக்கும் கண்களைக் காட்டிலும். இாவலர் புன்கண் அஞ்சும் = இரவலர்களின் வறுமைத் துயர்காட்டும் கண்நோக்கிற்கே அஞ்சும். புரவு எதிர்கொள்வனை=இரவலர் களைப் புரப்பதையே தொழிலாகக் கொண்டு வாழ்பவளுகிய அச்சேரலாதன. பாணர் கையது = நம் பாணர் கையில் உள்ளதும். பணிதொடை நரம்பின் பணியாதாரையும் பணிவிக்கும் இன்னிசை எழுப்பும் நரம்புகளை உடையதும். விரல்கவர் பேரியாழ் = விரலால் தடவி இசை எழுப்ப வல்லது மாகிய பேரியாழில். பாலை பண்ணி - ப ா லே ப் ப எண் ணை எழுப்பி. குரல்புணர் இன்னிசை = குரல் என்னும் நரம்போடு இணைத்து எழும் இசையில், தழிஞ்சி பாடி = தழிஞ்சி எனும் துறைஅமைந்த பாடலைப்பாடி. கண்டனம் வரற்கு = சென்று கண்டு பரிசில் பெற்று வருதற்கு மெல்லிய வகுந்தின் = மெத்தென்ற நிலத்தில் அமைந்து கிடக்கும் வழியில். சீறடி ஒதுங்கி = சிறிய கால்களில் ைப ய ப் ைப ய நடந்து. செல்லாமோ - செல்வோம் வருதியோ?

70

70