பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டுகள் வாழும். பொரிஅரை பொருந்திய = பொரித்த அடிமரத்தை உடையவாகிய, சிறியிலை வேலம் = சிறிய இலை களைக் கொண்ட வேலமரங்கள். பெரிய தோன்றும் = மிகுதி யாகத் தோன்றும். புன்புலம் வித்தும் = புன்செய்களை உழுது பயிர் செய்யும், வன்கை வினைஞர் = வன்மைமிகு கைகளை யுடையவராகிய உழவர். சீருடைப் பல்பகடு = செய்யும் தொழிலில் சிறப்புவாய்ந்த பலஎருதுகளை; ஒலிப்பப்பூட்டி = அவற்றின் கழுத்து ம ணி க ள் ஒலி எழுப்புமாறு பூட்டி: நாஞ்சில் ஆடிய கொழுவழி மருங்கின் = கலப்பை கொண்டு உழுத கொழு சென்ற படைச்சால்களின் பக்கத்தில். அலங்குகதிர்த் திருமணி பெறுஉம் = விட்டு விட்டு ஒளிகாட்டும் ஒளிக்கதிர்களையுடைய அழகிய மாணிக்க மணிகளைப் பெறும். அகன்கண் வைப்பின் நாடுகிழவோன் = அகன்ற இடங்களைக் கொண்ட பேரூர்களையுடைய நா ட் டி ற்கு உரியோனுகிய ஆடுகோட்பாட்டுச்சேரலாதன. வெண் தோட் டு அசைந்த ஒண்பூங் குவளையர் = .ெ வ ள்ளி பனந்தோட்டு நாரில்ை கொடுத்த ஒள்ளிய நிறம் காட்டும் குவளைமலர் மாலையுடையவராய் வாள்முகம் பொறித்த மாண்வரியாக்கையர் = வாள் முனையால் வகுப்பட்ட மா ண் பு மி கு தழும்புகளையுடைய உடம்பினராய் செல்உறழ் மறவர் = பகைவர்க்கு இடியேறு போலும் கேடு விளைக்கும் மறமாண்பு உடையராய். தம் கொல் படை தரீஇயர் - தங்கள், பகையழிக்கும் பெரும் படைக்கலங் களை ஏத்திவருவார். இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின் - இன்று, நுகரக்கடவ உணவுகளை இனிதே நுகர்ந்தேமாயினும். நாளை = நாளை. மண்புனை இஞ்சி மதில் கடந்தல்லது புகா உண்குவம் அல்லேம் = மண்ணை அரைத்துக் கட்டிய பகைவர் களின் அரண் மதில்களைக் கடந்தபின் அல்லது உணவு உட்கொள்வேம் அல்லேம். எனக்கூறி = என்று வஞ்சினம் வழங்கி. கண்ணி கண்ணிய வயவர் = தாம் அணிந்த தலை மாலைக்கு ஏற்பத் தலையாய வெற்றிகொள்ளும் வீரர்களுக்கு.

75

75