பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமகன் = தலைவன் என்றும். பொய் படுபு அறியா வயங்கு செந்நாவின் = தாம் கூறும் சூளுரை என்றும் பொய்த்துப் போதலை அறியாத, வாய்மையால் விளக்கம் பெற்ற செவ்விய நாவினையும். எயில்எறிவல்வில் ஏவிளங்கு தடக்கை=பகைவர் மதில்களை எறிந்து பாழாக்கும், வலிய வி ல் லு ம் அம்பும் விளங்கும் பெரிய கைகளையும். ஏந்து எழில் ஆகத்து=உயர்ந்த அழகிய மார்பினையும் உடைய சான்ருேர் மெய்ம்மறை = வீரர்க்கு மெய்புகு கவசம் போன்ற காவல் அளிப்பவன் என்றும். வானவரம்பன் = வானவரம்பன் எனும் பெயருடையான் என்றும். என்ப = கூறுவர். ஆகவே, விறலியர் ஆடுக = விறலியர்காள் அதுவே கூறி ஆடுவீராக! பரிசிலர் பாடுக = பரிசிலர்காள்! அதுவே கூறிப் பாடுவீராக!.

சேரர் ஆட்சிக்குட்பட்ட மலைநாட்டு மண், மணி வளம் மிக்கது. ஏர் கொண்டு உழும்போதே கலப்பையின் கொழுமுனைகள், மண்ணில் புதைந்து கிடக்கும் மணிகளை மேலே கொணர்ந்து விடும்; இந்த வளத்தைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாராட்டுவது போலவே, கானவர், கிழங்கு தேடிப் பழங்குழிகளை அகழ்ந்த வழி. ஆங்குக் கிழங்குகளோடு மணிகளும் காணப்படும், “குன்றத்துப் பழங்குழி அகழ்ந்த கானவன் கிழங்கினெடு கண்ணகன் தூமணி பெறுஉம்' (குறுந்தொகை : 379); கானவன் யானைக் கொம்பு கொண்டு, மலைப்பாறைகளைப் பொன் தேடிப் பிளந்த வழி, ஆங்குப் பொன்துகள்களோடு மணிகளையும் பெறுவன், "கானவன், பொருது தொலை யானை வெண்கோடு கொண்டு நீர் திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன், கண்பொருது இமைக்கும் திண்மணி கிளர்ப்ப’ (அகம் : 282) எனப் பிற சான்ருேர் களும் பாராட்டுவர். - - -

ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் வீரர்கள், இன்று இங்கு உணவு உண்டோம்; நாளே கோட்டையை வென்று

76

76