பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வன்புலம் காவலின் மாறியான் பிறக்கே"

- - - -புறம் 71 என் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனும்,

'சிறுசொல் சொல்லிய வேந்தரை வென்று. அவர் போர் முரசினைக் கைக்கொள்ளேனயின், குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக: புலவர்கள் எ ன் னை ப் பாடாராக இரப்போர்க்கு ஈயமாட்டா இன்மை வந்தடையுமாக ’’

'சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசுகொண்டு ஒருங்கு அகப் படேயிைன்......... - குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!........... புலவர் பாடாது வரைக என் நிலவரை! புரப்போர் புன்கண் கூர இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே",

- -புறம்: 72 எனத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும்,

"சென்று புகும் போர்க்களத்தில், பகைவர் கெட்டழியப் போரிடமாட்டேனுயின், என்மார்பு, குலமகளிரைப் புல்லாது விலைமகளிரைப் புணரும் பழியுடையோன் ஆகுக'

'சென்று அவன் -

வருந்தப் பொரேன் ஆயின், பொருந்திய

தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்

பல்லிருங் கூந்தல் மகளிர்

ஒல்லா முயக்கிடைக் குழைக என்தாரே'. எனச் சோழன் நலங்கிள்ளியும், உரைத்திருக்கும் வஞ்சினங்களைக் காண்க. -

78

78