பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மையை உணரத்தலைப்பட்டார் புலவர். வறுமையின் கொடுமை யால், பொருள்தேடிப்போகும் தம்போலும் ஒருசிலர் தவிர்த்து வேறுஎவரும் அப்பெருவழியில் தென்பட்டாரல்லர் காடு புகுந்து உணவு ேத டு ம் விலங்குகளும், குளிரின் கொடுமையால் அது செய்யாது, கூனிக் குறுகிக் குன்னந்து கிடந்தன. கொட்டும் பணியால் குளிர்க் கொடுமை மிகுந்துளதேனும், பொழுது புலர்ந்து ஞாயிறு வெளிப்பட்டதும், அத்துயர் தீர்ந்துவிடும் என்பதால், அக் கொடுமையத் தாங்கிக் கொண்டே நடந்து .ெ ச ன் ரு ர். ஆணுல், அவ்விரவு, அவர் எதிர்பார்ப்பது போல் அவ்வளவு விரைவில் கழிவதாகக் தோன்றவில்லை. நடக்க நடக்க அது வளர்ந்து கொண்டே சென்றது. உடன்வரும் பாணர் தலைவன், அடிக்கொருமுறை கீழ்வானத்தை நோக்க தலைப்பட்டான். ஆனால், அவர் நம்பிக்கை தகர்ந்ததேயல்லது, ஆங்கு விடிவெள்ளியும் தோன்றியதாகத் தெரிந்திலது. அதனல் அவர் வருத்தம் மேலும் மிகுந்தது. பரிசிற்பொருள்பால் உள்ள பெருவேட்கை யால் அக்கொடுமையைத் தாங் கி க் கொண்டு நடந்து சென்றார்கள். பலகாவதம் கடந்ததும், பாணர்தலைவன் திடு. மென மகிழ்ச்சிக்குரல் கொடுத்தான்். உடனே அனைவரும் கீழ்வான நோக்கினர். அடிவானத்தில் சிறிதே ஒளிபடர்ந்திருந்தது. அதைத் தொடர்ந்து, விடியற்காலத்துப் புல் இருள் மெல்ல அகல, சிறிது நாழிகைக்கெல்லாம், இரவில், அணுவி. ற் கு ம் இடம் இல்லாதபடி, எங்கும் நீக்கமற நிறைந்திருந்த பேரிருள் அ னை த் தும் அகன்றுவிட்டது. மேலும் சிலநாழிகைக்கெல்லாம், ஞாயிற்றின் சுடுகதிர்கள் தலைகாட்டவே. பனிமழை இருந்த இடம் தெரியாது மறைந்து விட்டது. இரவின் இருட்செறிவாலும், பனியின் குளிர்க்கொடுமையாலும் பட்டதுயரம் எல்லாம் பறந்தோடிப்போயின. அம்மனம்நிறை மகிழ்ச்சியால், வழிகளை விரைந்து கடந்து சேரநாடு அடைந்து சேரலாதனைக் கண்டார். கீழ்த்திசையில்

80

80