பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோன்றி, இருள் அகற்றியும், பனித்துயர் தீர்த்தும் நலம் பயக்கும் இளஞாயிறேபோல், தமிழகத்தின் குடதிசை நாடாம் சேரநாட்டில் தோன்றி, பகையிருள் போக்கியும், பரிசிலர்களின் பசித்துயர் தீர்த்தும் குடிபுரக்கும் ஆடுகோட்பாட்டுச்சேரலாதனின் நலம்கண்டு நயந்து பாராட்டினர்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் அன்பை நனிமிகப் பெற்று, அவன் புகழ்பாடும் பணிமேற்கொண்டு, அவன் அரசவைப் புலவராய் வீற்றிருக்கப் பெற்றமையால், அவன் பால் அமைந்து கிடக்கும் வேறுபல நலங்களையும் கண்டு கொண்டார். நன்செய் நிலங்கள் நல்கும், செந்நெல் செங்கரும்பு போல்வனவும், காடுகளில் பெறலாகும் யானைக்கோடு, மான்மதச்சாந்து போல்வனவும், மலைதருபொருள். களாம் அகில் ஆரம் போல்வனவும் கடல் வாணிகம் வழங்கும் பவளம் முத்து போல்வனவும் ஆகிய நால்வேறு செல்வங்களையும் நனிமிகப் பெற்றி ரு ந் த அவன், அவற்றை, இரவோர்க்கு ஈதல்போலும், அறநிகழ்ச்சிகளுக்கு இத்துணைய, நாடுகாத்தல் போலும், பொருள் நிகழ்ச்சிகளுக்கு இத்துணைய. வேனில் விழாப்போலும், இன்ப நிகழ்ச்சிகளுக்கு இத்துணைய எனப் பகுத்துப் பயன் கொள்ளும் திறம் உடைமையால், 'ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இத்துணைப் பேரரசளு ய் விளங்குதற்கு, அவன்பால் கிடந்து துணைபுரியும் பண்புகள்தாம் யாவை?' எனப் பல்லாற்ருனும் ஆராய்ந்து கண்டும், அறிந்து கொள்ளமாட்டாத அவன் அளப்பில் பெருநிலைகண்டு, அவன்பால் கழிபெரும் காதல் கொண்டார் காக்கைப்பாடினியார், - -

அப்போது, அவன் ஆண்மை ஆற்றல்களையும், பண்பு பெருமைகளையும், பண்டு அறியாமையால் அவைேடு பகை

81

81