பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு வந்து போரிட்ட அரசர் சிலர், அவளுல் வலியழிந்த நிலையில் தம் பிழை உணர்ந்து, அரும் பெரும் பொருள்களைத் திறையாகத் தந்து, பணிந்து வாழ்வு வேண்டி நிற்கவும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், அவர்கள்பால் சென்ற சினம் தணியாளுய், அவர் அழிவே கருதினன். ஆடுகோட்பாட்டுச் சேரலாதைேடு அரசவைக்கண் வீற்றிருந்த புலவர், அடைந்தார்க்கு அடைக்கலம் நல்கும் நல்லோகிைய அவனுக்கு, பகைவர்தம் பிழையுணர்ந்து பணிந்தவழியும், அவர்மீது பகையுணர்வே கொள்வது பொருந்தாது என உணர்ந்து, அதல்ை அவன் புகழ் மாசுறுமே என்று அஞ்சி, அக்கணமே தம் இருக்கைவிட்டு எழுந்து, 'சேரலாத பண்டு பகைகொண்டு அலைந்தவர், பின்னர்த் தம் பிழை உணர்ந்து, தங்கள்பால் உள்ள அரிய பொருள்களைத் திறையாகத் தந்து பணிந்து விட்ட பின்னர், அவர்கள், நின்னல் புரக்கத்தக்க நண்பர்களேயல்லது பகைவர் ஆவார். அவர் நாடும், உன் அளிபெறத்தக்கதேயல்லது, உன்னல் அழிவு காணத்தக்கது அன்று.ஆகவே, அவர் கொடுப்பனகொண்டு அவர் நாட்டைக் காப்பது, தங்கள் நாட்டின் நலம் நாடும் அவர்கட்கு மட்டுமே யல்லாமல், உனக்கும் கடகுைம். ஆகவே, அக்கடமை நெறியினை இன்றே மேற்கொண்டு, இவர் பிழை மறந்து பிழைத்துப் போக விடுக!” எனக்கூறி, அவன் புகழ்க் கேடுருமைக்கு வழிவகுத்து விழுப்புகழ் கொண்டார்.

விலங்குகள் உடல் குன்னும் கொடுமை தருவது, மாசித் திங்களில் பெய்யும் பணியே ஆகவும், அப்பனியின் கொடுமையை, அப்பனிகொட்டும் காலமாகிய மாசித்திங்கள் மீது ஏற்றி, மாவினம் குன்னத்தற்குக் காரணமாம் மாசித் திங்கள் என்றுகூறிய உபசார வழக்கு நயத்தால், மாகூர் திங்கள் என்ற அத் தொடரால், இச்செய்யுள் பெயர் பெயர் பெற்றுளது.

82

82