பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. 'பகல் நீடாகாது, இரவுப் பொழுது பெருகி,

மாசி நின்ற மாகூர் திங்கள் பனிச்சுரம் படரும் பாண்மகன் உவப்பப் புல் இருள் விடியப், புலம்பு சேண் அகல, 5 பாய் இருள் நீங்கப், பல்கதிர் பரப்பிச்

ஞாயிறு குணமுதல் தோன்றியா அங்கு, இரவல் மாக்கள் சிறுகுடி பெருக, உலகம் தாங்கிய, மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை வீற்றிருங் கொற்றத்துச் 10 செல்வர் செல்வ சேர்ந்தோர்க்கு அரணம் ! .

அறியாது எதிர்ந்து, துப்பின் குறையுற்றுப் பணிந்து திறை தருப நின் பகைவராயின், சினம்செலத் தணிமோ! வாழ்க நின் கண்ணி! பல்வேறு வகைய நனந்தலை ஈண்டிய 15 மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும்

ஆறு முட்டுரு அது அறம்புரிந்து ஒழுகும் நாடல் சான்ற துப்பின், பணத்தோள், பாடுசால் நன்கலம் தருஉம் நாடு புறம் தருதல் நினைக்குமார் கடனே’’.

துறை: செந்துறைப் பாடாண் ப்ாட்டு வண்ணம்: ஒழுகு வண்ணம் தூக்கு: செந்துக்கு பெயர்: மாகூர்த்திங்கள்

ஞாயிறு தோன்றியாங்கு, குடிபெருக, உலகம் தாங்கிய கற்பின் வில்லோர்குடியில் தோன்றிய மெய்ம்மறை! செல்வர் செல்வ! சேர்ந்தோர்க்கு அரணம்! பகைவர் பணிந்து திறை தருவராயின் சினம் தணிமோ பண்ணியம் பகுக்கும் ஆறு முட்டுருது ஒழுகும் துப்பின் பணத்தோள் உடைய நினக்கு,

83

83