பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்ணளி கொள்வாயாக! பல் வேறு வகைய நனந்தலை ஈண்டிய = காடும் மேடும் எனப் பல்வேறு வகைப்பட்ட வாய பரந்த நிலங்களில் இருந்து வந்து குவிந்தனவும். மலையவும் கடலவும் = மலேநாட்டிலிருந்தும் கடல் நாட்டிலிருந்தும் வந்து குவிந்தனவுமாகிய, பண்ணியம் பொருட்களே. பகுக்கும் ஆறு முட்டுரு.அது = இன்ன துறைக்கு இவ்வளவு எனப் பகுக்கும் துறையில் குறைபாடு செய்யாமல், அறம் புரிந்து ஒழுகும்=அறத்திற்கு உரியனவற்றை விரும்பி மேற்கொள்ளும். நாடல் சான்ற துப்பின் பணத்தோள் = இவன் இத்துணைச் சிறந்து விளங்குதற்கு யாதுகாரணம் எனப் பகைவரும் பிறரும் ஆராய்ந்து காணற்காம் பெருவலி படைந்த தோள் உடையோணுகிய, நினக்கு = உனக்கு. பாடுசால் நன்கலம் தருஉம் = பெருமை மிக்க நல்ல பொருள் களைத் திறையாகக் கொடுக்கும் நாடு புறம் தருதலும் கடன் டீ பகைநாட்டைக் காப்பதும் கடகுைம். ஆகவே அது ஆற்றுக! வாழ்க நின் கண்ணி = உன் கண்ணி வாழ்வதாக!

&5

85