பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலந்துய்த்துக் கொண்டிருந்தாலும், அவன், தன் நாட்டு மக்களும், தன்னை நாடிவரும் இரவலர்களும் இனிது வாழ்வதற்குத் துணைபுரியவல்ல, அழியாப் பெருவளங்களை ஆக்கி வைக்கத் தவறினைல்லன். அவற்றைக் குறைவற ஆக்கி வைத்துவிட்ட மனநிறைவினலேயே, அவன், இப்போது, இன்பவாழ்வில் சிறிதே சிந்தை போக்கியுள்ளன். எடுத்துக் காட்டுக்கு ஒன்று; பாண்மகளே! அவனை நாடி இவண் அடைய, இடையில் கடந்துவந்த பெருவழிகளில், வருவார்க்கு வழியிடை வருத்தம் தோன்ருவாறு, அவன் வகுத்திருந்த அறப் பணி, உன் அகத்தைத் தொடவில்லையோ? தன்னைக் காண நெடுந்தொலைவிலிருந்து, தலைநகர் நோக்கி வருவார். வெய்யிலின் கொடுமையாலோ, உண்ணுநீர் கிடைக்காமை யால் உளவாம் நாவறட்சிக் கொடுமையாலோ துன்புறுவது கூடாது என்பதால், பெருவழியின் இருமருங்கிலும், நாட்டு நலம்பேணு நயமரங்கள் அரங்கொண்டு அழிக்க முனைந்தால், அசத்தின் வாய்மழுங்குவதல்லது அடியற்று போகாத் தின்மை வாய்ந்த நெல்லி மரங்களே, வரிசை வரிசையாக வளர்த்து வைத்திருக்கும் அ வ ன் அறப்பணி உன் கண்ணில் படவில்லையோ? சின்னஞ்சிறு இலைகளேயாயினும், நெருங்கத் தழைத்திருப்பதால், வருவார்க்கு வெய்யிலின் கொடுமை தோன்ருவாறு, நிறை நிழல் அளித்துக் கொண்டு நிற்பதை நீ உணர்ந்திலையோ? புறத்தே வண்டுக்கூட்டம் மொய்த்துக் கிடப்பினும், அதல்ை துளையுண்டு கெட்டுப்போகாத, முட்டை போலும் வடிவினையுடையதான், அகத்தேயுள்ள சிறுகொட்டை தவிர்த்து, முழுவதும் உண்ணும், பக்குவம் உடைய இறுகிய சாறு கொண்ட கனிகள், சிறுகாம்பு முழுவதும் வரிசை வரிசையாகக் கனிந்து கிடக்கும் காட்சியைக் காணவில்லையோ? அக்கனிகள், மரம் ஏறிப் பறிக்க வேண்டிய முயற்சிதான்ும் செய்ய வேண்டாதே மரத்தடியில் வீழ்ந்து, வழிப்போவார்க்கு உண்னும் உணவும், பருகும் நீரும் தாமே ஆகிப் பயன்பட்டுக்

88

88