பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

pro

91

pro


காரணங்களுக்காகத் தனியார் நிறுமத்திற்கு விற்றல்

produce, product - விளை பொருள்: உற்பத்தியினால் உண்டாவது: நெல், கரும்புமிதிவண்டி

production - உற்பத்தி: உட்பலன் வெளிப்பலனாக மாறும் முறை. வேளாண்மை முதல் தொழிற்சாலை வரை உற்பத்தி அமைவது. உழைப்பு, முதல், நிலம், கச்சாப் பொருள்கள் ஆகியவற்றின் சேர்க்கையே உட்பலன்கள் (உட்பாடுகள்) இவை உற்பத்திக் காரணிகள். முதல் நிலை உற்பத்தி, இரண்டாம் நிலை உற்பத்தி, மூன்றாம் நிலை உற்பத்தி என இது மூவகை

profit - இலாபம்: ஆதாயம். விற்ற விலையில் வாங்கிய விலையைக் கழிக்க வருவது

profit and loss account - இலாப நட்டக் கணக்கு: ஒரு நிறுமக் காட்டும் இலாபமும் நட்டமும்.

profit and loss appropriation account - இலாப நட்டப் பகிர்வுக் கணக்கு

profitser - கொள்ளை இலாபம் அடிப்பவர்: ஒரு பொருள் பற்றாக் குறையாக இருக்கும் பொழுது, அதை அதிக விலைக்கு விற்று ஆதாயம் தேடுபவர்

proforma invoice - முன் இடாப்பு: இறுதிப்பட்டியலுக்கு முன்னதாக அனுப்பப்படுவது

promissory note - உறுதி மொழி முறி : கடன் வாங்குபவர் கடன் கொடுப்பவருக்கு எழுதிக் கொடுப்பது. இதில் எல்லா வரையறைகளும் இருக்கும்

promoter - உயர்த்துபவர்: ஒரு நிறுமத்தை உருவாக்கி நிலை நிறுத்துபவர்

property - சொத்து: ஈட்டப்படும் பொருள். இருவகை. புவனாவது: மனை, நிலம்.புலனாகாதது - முதல்,பங்கு

properly accounts - சொத்துக் கணக்குகள்: உண்மைக் கணக்குகள். சரக்குகளும் உடைமைகளும்

proposed dlvidend - மானித்த இலாப ஈவு

prospectus - வாய்ப்பறிக்கை : தகவல் அறிக்கை . ஒரு நிறுமத்தின் பங்குகள் புது வெளியீடு பற்றிய தகவல் அறிக்கை . இதன் மூலம் ஒரு நிறுமம் தன் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்றுப்பணம் திரட்டும்

provision - ஒதுக்கீடு: இலாபத்தில் குறிப்பிட்ட நற்செயலுக்காக ஒதுக்கப்படும் தொகை - படிப்புதவித் தொகை.

provident fund - நலநிதி: ஊழியர் குறிப்பிட்ட ஊதிய