பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

rea

94

regi




realized profit – கைவரு இலாபம் : முடிவடைந்த ஒரு நடவடிக்கையிலிருந்து உண்டாகும் ஆதாயம் எ-டு. சரக்கு விற்பனை

real property – மெய்ச்சொத்து

பா. real estates.

real value— மெய்மதிப்பு பா பண மதிப்பு.

rebate-தள்ளுபடி : 1) வரித்தள்ளுபடி 2) கழிவு : பருவகால விற்பனையில் அளிக்கப்படுவது எ-டு. ஆடைகள், மின் கருவிகள்

receipt 1) வரவு 2) வரவுச்சீட்டு: பெற்றுக்கொள்ளும் பணத்திற்குக் கொடுக்கப்படும் ஆவணம்

receiver- 1) பெறுநர் 2) உடைமைக்காப்பாளர்: வழக்கிலிருக்கும் உடைமையைக்காக்க, நீதிமன்றத்தால் அமர்த்தப்படுபவர்

recommended retail price – பரிந்துரைக்கும் சில்லரைவிலை: ஓர் உற்பத்தியாளர் தன் விளைபொருளுக்குப் பரிந்துரைக்கும் சில்லரை விலை

record - பதிவணம்: ஆவணம். பதிவேடு

recovery stock – மீள்பங்கு: விலை வீழ்ச்சியடைந்த பங்கு. மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்குரிய வாய்ப்பு

rectifying entry – பிழைநீக்கப்பதிவு: ஒரு தலைப்பில் உள்ளதை மற்றொரு தலைப்பில் பற்றோ வரவோ எழுதுவதால் ஏற்படும் பிழை. இதைச் சரிக்கட்டுப் பதிவின் மூலம் நீக்க வேண்டும்

redemption – மீட்பு: கடன் பத்திரம் முதிர்ச்சி அடையும் பொழுது, அதற்குரிய தொகையைப் பெறுதல். வாங்கும் நாள் அதில் குறிக்கப்பட்டிருக்கும்

redemption date – மீட்பு நாள்: ஓர் ஈட்டை மீட்கும் நாள்

real account – மெய்க்கணக்கு: நிலம்,கட்டடம்,முதலீடு முதலியவற்றிற்குரிய பேரேட்டுக் கணக்கு. பெயரளவு கணக்கிலிருந்து வேறுபடுவது

reducing balance method– குறைந்துசெல் இருப்பு முறை

reducing installment method – குறைந்து செல் தவணைமுறை

reference - 1) பார்வை 2) குறிப்புரை

registered capital – பதிவு முதல் பா. share capital.

registered company – பதிவு நிறுமம்

registered name — பதிவுப்பெயர்