பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

regi

95

reso


registered office – பதிவலுவலகம்

registered post - பதிவஞ்சல்: பாதுகாப்பான ஆவணங்களைப் பதிவு செய்து அஞ்சல் வழி அனுப்புவது. போய்ச்சேர்வது உறுதி

registrar of companies –நிறுமப் பதிவாளர்

registration fee – பதிவு கட்டணம்

reissue - மறுவெளியீடு: பங்கை மீண்டும் வெளியிடுதல்.

remuneration — ஊதியம்: 1) ஒரு பணி செய்யப்பட்டதற்காகக் கொடுக்கப்படும் தொகை எ-டு. மேற்பார்வை ஊதியம். 2) சம்பளம்.

rent- 1) தீர்வை: நிலத்தீர்வை 2) வாடகை: வீட்டு வாடகை.

rent control–1) தீர்வைக்கட்டுப்பாடு 2) வாடகைக் கட்டுப்பாடு

repatriates bank – தாயகம் திரும்பியோர் வங்கி: ஒரு மைய அரசு நிறுவனம்

replacement cost – மாற்றீட்டுச்செலவு: ஒரு நிறுமத்தின் சொத்துகள் மாற்றியமைக்கப்படும் விலை

report - அறிக்கை: ஆண்டு அறிக்கை, தலைவர் அறிக்கை, இயக்குநர் அறிக்கை. நிறுமக் கூட்டத் தொடர்பானது

research and development, R and D - ஆராய்ச்சியும் வளர்ச்சியும்: புதிய விளைபொருள்களையும் தொழில் முறைகளையும் உருவாக்க அரசும் தொழில் நிறுவனங்களும் மேற்கொள்ளும் சீரிய முயற்சி. ஓர் இன்றியமையாத்துறை

reserve- காப்பு இருப்பு : ஒரு நிறுமத்தின் பங்கு முதல் அல்லாத முதலின் பகுதி. ஆதாயத்திலிருந்து அல்லது பெயரளவு மதிப்புக்கு மேலுள்ள பங்கு முதல் வெளியீடுகளிலிருந்து வருவது

reserve capital – காப்பு முதல்: அழையா முதல். ஒரு நிறுமத்தின் வெளியிடப்பட்ட முதலின் பகுதி. காப்பாக வைக்கப்பட்டு, நிறுமம் கலையும் பொழுது அழைக்கப்படுவது

reserve fund —காப்பு நிதி: நிறுமக்காப்புக்காக உள்ளது

resolution — தீர்மானம்: ஒரு நிறுமக் கூட்டத்தில் கொண்டுவரப்படும் தீர்மம் (மோஷன்), நிறைவேற்றப்படும் பொழுது தீர்மானவாவது. இது பொதுத்தீர்மானம்,சிறப்புத்தீர்மானம்,தனித் தீர்மானம் என மூவகை. பின் இரண்டுக்கும் குறிப்பிட்ட கால அறிவிப்பு தேவை அதற்குப்பின்னரே பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்