பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

res

96

rev




restrictive endorsement – தடை வரம்பு மேலொப்பம்: மாற்றுண்டியலில் செய்யப்படுவது. மேலொப்பம் செய்யப்படுபவரின் உரிமையை எல்லைப்படுத்துவது

retail- சில்லரை

retail sales — சில்லரை விற்பனை

retailer - சில்லரை வணிகர்: சரக்குகளை மொத்த வணிகரிடமிருந்து வாங்கிச் சில்லரையாக விற்பவர். சில்லரை வணிகம் மூவகை : 1) பன்மக்கடைகள் 2) கூட்டுறவுச் சில்லரை விற்பனை 3) தனிச் சில்லரை விற்பனை

return - 1) திருப்பம் : முதலீட்டு வருவாய் அதன் செலவின் விழுக்காடாகத் தெரிவிக்கப்படுவது. கொள்முதல் திருப்பம், விற்பனைத் திருப்பம் என இரு வகை 2) புள்ளித்தாக்கல்: ஆண்டுப் புள்ளித்தாக்கல் பா. return on capitals.

returned cheque – திரும்பிய காசோலை: காசோலை கொடுப்பவர் கணக்கில் பணம் இல்லாத காரணத்தால் பெறுபவரிடம் அக்காசோலைத் திரும்பச் செல்லும்

return on capital–முதல் மீதான திருப்பம்: பயன்படுத்தப்படும் முதலின் விழுக்காட்டால் ஒரு நிறுவத்தின் ஆதாயங்கள் தெரவிக்கப்படுபவை. இது ஒரு நிறுமத்தின் திறனை வெளிப்படுத்துவது

returns in-wards – உள்த்திருப்பங்கள்: பிடிக்காததால் வாடிக்கையாளர் ஒரு நிறுவனத்திற்குத் திருப்பி அனுப்பும் சரக்குகள்

return outwards -வெளித்திருப்பங்கள் : பிடிக்காத காரணத்தால் ஒரு நிறுவனம் தான் வாங்கிய சரக்குகளை வழங்கியவருக்கே திரும்ப அனுப்புதல்

revaluation of assets- இருப்பு மறுமதிப்பீடு: இருப்புகளை மதிப்பு உயர்வு காரணமாகவோ பணவீக்கக் காரணமாகவோ ஒரு நிறுவனம் மறுமதிப்பீடு செய்யும்

revenue account – வருவாய்க்கணக்கு: வணிக நடவடிக்கைகளிலிருந்து வரும் வருமானத்தைப் பதிவு செய்யுங்கணக்கு ஒ. capital account.

revenue expenditure — வருவாயினச் செலவு: ஒரு நிலைச்சொத்து செம்மையாக இயங்கப்பயன்படும் பராமரிப்புச் செலவு. தவிர, ஒரு தொழிலின் வருவாய் ஈட்டும் திறம் குன்றாமல் பேணும் செலவு

revenue profit – வருவாய் இலாபம்: நடைமுறை இலாபம். இரு வகை இலாபங்களில் ஒன்று. மற்றொன்று முதலின இலாபம்