பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

rev

97

sales


 revenue receipts — வருவாயின வரவுகள்: முதலீட்டு வட்டி, பங்காதாயம் முதலியவை.

revenue reserve- வருவாய் இருப்பு: பா. reserve.

rights Issue -உரிமை வெளியீடு: பங்குச் சந்தையில் விலைப் புள்ளி வழங்கிய நிறுமங்கள் புதிய முதல் எழுப்பும் முறை. புதிய பங்குகள் பரிமாற்றுக்காக இது செய்யப்படும்

ring- வணிக வட்டாரம் : 1) உற்பத்தியாளர் கூட்டம் ஒரே விலையில் பொருள்கள் விற்கக் கூடுவது 2) ஏலதாரர் கூட்டம்

risk - இடர்: வருந்துவதற்குரிய நிகழ்வு. எ-டு. கை துண்டிக்கப்படுதல் பா. peril

risk capital – இடர் முதல்: உள்ள திட்டத்தில் இடப்படும் முதல். அதாவது, ஒரு புதிய முயற்சியில் பயன்படுத்தப்படும் முதல்

royalty - உரிமைக்கொடை: உரிமைத் தொகை. 1) அறிவுச் சொத்துரிமை: நூலுரிமை 2) கனிம உரிமை: கனிமங்கள் விற்கப்படுவதற்காக. அதன் உரிமையாளருக்குக் கொடுக்கப்படுந்தொகை

{{|Xx-larger|S}}

salary – ஊதியம்: சம்பளம். பணியாளர் மாதந்தோறும் வாங்கும் மொத்தத் தொகை

sale or return – விற்பனைஅல்லது திருப்பம் : விற்றவை போக, எஞ்சியவற்றை விற்பவர் வாங்குபவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் வாணிக நிபந்தைனை அமைதல்

sales - விற்பனை ; இது விற்ற சரக்கு. தொழிலில் விற்றுமுதல் எனப்படுவது

sales day book – விற்பனை நாள் ஏடு: முதன்மைப் பதிவேடு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட இடாப்புகள் இதில் பதிவு செய்யப்படும். இதிலிருந்து வாடிக்கையாளரின் தனிக் கணக்குகளுக்குப், பதிவுகள் மாற்றப்படும். அதே போல, இடாப்புகளின் மொத்தம் பெயரளவுப் பேரேட்டி லுள்ள விற்பனைக் கணக்கில் பதிவு செய்யப்படும்

sales ledger – விற்பனை பேரேடு: ஒரு நிறும வாடிக்கையாவர்களின் தனிக் கணக்குகளைப் பதிவு செய்வது. இதிலுள்ள இருப்பு மொத்தம்,நிறும வணிகக் கடனாளர்களைக் குறிக்கும்

sales management — விற்பனை மேலாண்மை: திட்ட மிட்ட அங்காடி வழிமுறையில் விற்ப்னை ஆற்றலை ஊக்குவித்தல், ஆள் அமர்த்தல், ஆளுதல் ஆகியவற்றைக் கண்காணித்தல் ஆகும்