பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

share

100

ship



வேறு பெயர்கள் பதிவு செய்யப் பட்டி முதல், பெயரளவு முதல். சட்டத்திட்டப்படி ஒரு நிறுமம் எழுப்பிய முதலின் தொகை.

share capital, fully pald – முழுதும் செலுத்தப்பட்ட பங்கு முதல் : பங்கின் முழுச்சம மதிப் புக்குப் பங்குதாரர்கள் தொகை செலுத்துதல். பங்கு முதலில் ஒரு பகுதி செலுத்தப்படும் முதல் அழைத்த முதல் ஆகும்.

share capital, issued – வெளியிட்ட பங்கு முதல்: வேறுபெயர் ஒப்பிய பங்கு முதல். ஏற்றுக் கொள்ளப்பட்ட முதல்.

share certificate – பங்குச் சான்று: பங்குரிமையைத் தெரி விக்கும் ஆவணம். இதில் அதற் குரிய அனைத்து விவரங்களும் இருக்கும்.

share discount – பங்கு வட்டம்: பங்குத் தள்ளுபடி.

share exchange – பங்கு பரிமாற்று.

shareholder – பங்குதாரர்:ஒரு நிறும உறுப்பினர். பங்கு உரிமையாளர்.

share option – பங்கு விருப்ப உரிமை: ஒரு நிறுமத்தில் புதி தாகச் சேரும் வேலையைளர் களுக்குப் பங்குகள் வாங்க அளிக்கப்படும் விருப்ப உரிமை பா. Option.

share premium –பங்கு முனைமம்:பங்கு பங்கிற்காகச் செலுத்தப்படும் தொகை. பங் குத் தொகைக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

share premium account – பங்குத் தொகைக் கணக்கு: பா. share premium.

share register - பங்கு பதிவேடு: வரையறுக்கப்பட்ட நிறு மம் வைப்பது. பங்கு பற்றிய முழு விவரங்களும் இருக்கும்.

share splitting – பங்குப் பிரிப்பு:சிறிய அலகுகளாக ஒரு நிறுமத்தின் பங்கு முதல் பிரிக்கப்படுதல்.

share transfer — பங்கு மாற்றுகை பா.transfer deed.

ship broker — கப்பல் தரகர்: கப்பல்களை வாடகைக்கு ஒழுங்கு செய்து கொடுப்பவர்.

shipped bli – கப்பல் உண்டியல்: குறிப்பிட்ட கப்பலில குறிப்பிட்ட சரக்குகள் ஏற்றப்பட் டுள்ளன என்பதற்குரிய பட்டியல்.

shipper - கப்பல் நிறுவனம்: ஏற்றுமதி இறக்குமதி செய்யும் அமைப்பு.

shipping andforwarding agent - கப்பல் மற்றும் அனுப்பும் முக வர் : கடல், காற்று. இருப்பு வழி, சாலை ஆகியவை வழியாகச் சரக்குகள் அனுப்புவதில் தேர்ச்சியுள்ளவர்.

shipping documents — கப்பல்ஆவணங்கள்: வங்கிக்கு ஏற்று