பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ship

101

sleep


மதியாளர்கள் அளிக்கும் ஆவ ணங்கள். இவற்றில் வணிக இடாப்பு. கப்பல் உண்டியல், காப்புறுதிமுறி, எடைக் குறிப்பு. தரச் சான்றிதழ், ஏற்றுமதி உரி மை முதலியவை இருக்கும்.

ships report – கப்பல் அறிக்கை: துறைமுகத்திற்குக் கப்பல் வந்து சேர்ந்ததும் கப்பல் தலை வர் துறைமுக அதிகாரிகளுக்கு அளிக்கும் அறிக்கை. கப்பல், குழு, பயணிகள், சரக்குகள் பற்றிய விவரங்கள் இருக்கும்.

shorts - குதுகுகள் : குறைவாக உள்ள ஈடுகள், பண்டங்கள், செலாவணிகள்.

short term capital – குறுகிய கால முதல்: குறுகிய காலத் திற்கு ஒருதவிர்க்க முடியாத தேவையை நிறைவு செய்ய எழுப்பப்படும் முதல் எ-டு. வங்கிக் கடன்.

short term interestrates – குறுகிய கால வட்டி வீதங்கள் : குறுகிய கால கடனுக்குரியவை. இவை அதிகமிருக்கும்.

short working – குறை உற்பத்தி: ஒரு வகைச் சொத்துக் கணக்கு. எப்போதும் பற்று இருப்பையே காட்டுவது.

short working suspense account - குறை உற்பத்தி அனாமத்துக்கணக்கு.

shrinkage – சுருக்கம்: விற்னை என்று பதிவு செய்யப்படாமல் சில்லரை விற்பனை யிலிருந்து மறையும் சரக்குகள், உடைந்தவை, சிதைந்தவை திருட்டுப் போனவை முதலிய வை இதில் அடங்கும்.

sight bill – பார்வை உண்டியல்: பார்த்ததும் கொடுக்கப்படும் மாற்றுச்சீட்டு.

sight draft — பார்வை வலைவோலை: பார்த்தவுடன் பணம் கொடுபடும் மாற்றுண்டியல்.

simple interest –தனிவட்டி: தனித்துக் கணக்கிடப்படுவது. நூற்றுக்கு 12% 18% 24% என்று கணக்கிடப்படுவது.

single entry system- ஒற்றைப் பதிவு முறை: கணக்கு எழுதும் முறைகளில் ஒன்று. தொழில் நடவடிக்கையில் ஒரு நிலை மட்டுமே பதிவு செய்யப்படுவது.பண நடவடிக்கைகளைப் பொறுத்தவரை இதில் பணக் கணக்கும், கடன் நடவடிக்கை களைப் பொறுத்தவரை ஆள்சார் கணக்குகளும் பதிவு செய்யப்படும்.

:sinking fund – கடன்தீர் நிதி': அழிவுறும் சொத்தை மாற்றீடு செய்ய ஏற்படுத்தும் நிதி. வேறு பெயர் கழிவு நிதி. சொத்தைப் புதுப்பிக்கவும் பொறுப்பை மீட்கவும் பயன்படுவது.

sleeping partner – செயறு கூட்டாளி: தூங்கு கூட்டாளி. கூட்டாண்மையில் முதலீடு செய்