பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

soci

102

stab


பவர். ஆனால், வணிகக் செயல்களில் பங்கு கொள்ளா தவர்.

social security – சமூகப் பாதுகாப்பு: வேலையற்றோர், நோயுற்றோர், ஒய்வுபெறுவோர் முதலியோருக்கு அளிக்கப்படும் அரசுப்படிகள்.

soft commodities — மென் பண்டங்கள்: உலோகமல்லாதவை: கோகோ, காப்பி, சர்க்கரை.

soft loan — மென்கடன்;குறைந்த வட்டியுள்ள கடன்.

sole agency— தனிமுகமை : ஓர் எல்லை யில் உட்பட்ட காலத் திற்கு ஒரு பொருளை விற்கத் தனி உரிமை உடையது.

sources of finance - நிதி மூலங்கள்: ஒரு நிறுமம் தான் வேண்டும் நிதிநிலை பெறும் தலைவாய்கள். இரு வகை. 1) அகமூலங்கள்: பங்குமுதல், சேர்ப்பு ஆதாயங்கள். 2) புற மூலங்கள்: கடனிட்டு ஆவண வெளியீடு, பொது மக்கள் வைக்கும் வைப்புத் தொகைகள், வணிக வங்கிக் கடன்கள்.

special crossing – தனிக்கீறல்: கீறல் வரிகளுக்கிடையே வங்கி யின் பெயர் எழுதப்பட்டிருக் கும். அந்த வங்கியிலேயே பணம் பெற இயலும்,

speculation — உய்மான வணிகம்: ஊக வணிகம். கொள்ளை இலாபம் ஈட்ட ஒன்றை வாங்கு தல் அல்லது விற்றல்.

sponsor – 1) வழங்குபவர்; மக்கள் ஊடகத்தில் ஒரு நிகழ்ச் சியை அளிப்பவர். 2) வெளியீட்டகம்: ஒரு நிறு வனத்தின் ஒரு புதிய பங்கு வெளியீட்டைக் கையாளும் இல்லம்.

spot goods – அவ்விடப் பொருள்கள்: அவ்விடத்தி லேயே உடன் கிடைக்கும் பொருள்கள்.

spot price -அவ்விட விலை: அவ்விடப்பொருளின் விலை. இது முன்னோக்கு விலைக்கு மிகுதியானது.

squeeze - முடக்கம்:பண வீக்கத்தைத் தடுக்க அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள். இது பங்கு ஈவு முடக்கம், பற்று முடக்கம், வருமான முடக்கம் எனப் பல வகை.

stabilizers – நிலை நிறுத்திகள்: வேலை வாய்ப்பு, உற்பத்தி, விலைகள் ஆகியவற்றில் ஏற் படும் ஊசலாட்டத்தை எல்லைப் படுத்தத் தடையில் பொருளா தாரத்தில் பயன்படும் பொருளி யல் நடவடிக்கைகள்: முன் னேறு வருமான வரி, வட்டி வீதக் கட்டுப்பாடு.