பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

statu

104

stock


 statutory books – சட்டமுறை ஏடுகள்: நிறுமச்சட்டப்படி வைக்கப்படவேண்டிய கணக் கேடுகள்.

statutory damages — சட்டமுறை நட்ட ஈடுகள்.

statutory, meeting – சட்டமுறைக் கூட்டம்: நிறுமச் சட்டப் படி நடக்கும் கூட்டம்.

statutory report – சட்டமுறை அறிக்கை: சட்டப்படி தேவைப் படும் அறிக்கை எ-டு. ஆண்டு அறிக்கை.

'sterilization – ஈடுசெய்தல்:: உருவாகும் பணவீக்க, பணச் சுருக்கம் என்னும் விளைவு களைச் சரிக்கட்டல். அரசு அயல் செலாவணிச் சந்தையில் குறுக்கிடும் பொழுது இவை உண்டாகும்.

:stock - 1) பங்கு:' நிலையான வட்டியுள்ள ஈடு. அரசு அல்லது நிறுமம் வெளியிடுவது 2) இருப்பு: சரக்கு அல்லது முதல் இருப்பு.

stock appreciation – இருப்பு உயர்வு: அளவில் கூடுதல் அல்லது குறைதல்.

stock broker – பங்குத்தரகர்: பங்குச் சந்தையில் ஈடுகளை வாங்குபவரும் விற்பவருமான முகவர்.

stock building – இருப்புக் குவிப்பு: எதிர்கால விற்பனைக்குச் சரக்கு இருப்பை உயர்த்தும் முறை.

stock control – இருப்புக் கட்டுப்பாடு.

stock depreciation – இருப்புத் தேய்மானம்: இருப்புப் பொருள்கள் தேய்வடைதல் எ-டு. எந்திரம்.

stock exchange — பங்குச் சந்தை: ஈடுகள் வாங்கப்படும் விற்கப்படும் அங்காடி.

stock - in-trade – வணிக இருப்பு: ஒரு நிறுமம் தன் வணிகத்திற்காக வைத்துள்ள சரக்குகள்: கச்சாப்பொருள் கள், இயைபுறுப்புகள். நடை பெறும் வேலை, முடிந்த பொருள்.

stock policy - இருப்பு முறிமம்; ஒரு நிறுவனத்தின் சரக்குகள் பற்றிய காப்புறுதி முறி.

stock provision – இருப்பு ஒதுக்கீடு: கணக்கேடுகளில் செய்யப்படும் பதிவு. இது இலாப - நட்டக் கணக்கு பற்றியது. இதற்கு ஒரு தொகை ஒதுக்கப்படும்.

stock reserve- இருப்புக் காப்பு.

stock and debtors system —இருப்பு - கடனாள் முறை.

stock-taking – இருப்பு எடுப்பு: ஆண்டு முடிவில் இருப்பு