பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

stock

105

super


மதிப்பை அறிய, அதன் தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு எண்ணிக்கை குறிக்கப்பெறும். 6) பண ஏடு 7) குறிப்பேடு.

stock - turnover – இருப்பு விற்றுமுதல்: ஒரு நிறுவனத்தின் வணிக இருப்பு எத்தனை தடவைகள் ஒராண்டில் விற்கப் பட்டன என்பது.

strap - மூவிருப்பம்: இது பங்கு அல்லது பண்ட அங்காடி பற் றியது. வைப்பு விருப்பம் ஒன்று: அமைப்பு விருப்பங்கள் இரண்டு. ஒரேகாலத்தில் ஒரே விலை உடையவை.

strip — மூவிருப்பம்: பா. strap.

sub-agent - துணை முகவர்: முகவருக்குத் துணையாக இருப்பவர்.

sub-lease – உட்குத்தகை.

subscribed share capital – ஒப்பிய பங்கு முதல்:பா. share capital.

subscriber — 1) உறுப்பினர் 2) ஒப்பமிடுபவர்.

subscription shares – ஒப்புதல் பங்குகள் : அதிக வட்டிதரும் பங்குகள்.

subsidiary books – துணை ஏடுகள் : பல்வேறு நடவடிக்கைகளைப் பதிவு செய்யப் பயன் படுபவை. பலவகை: 1) கொள்முதல் ஏடு 2) விற் பனை ஏடு 3) உள்திருப்ப ஏடு 4) வெளித்திருப்ப ஏடு 5) பெறு வதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு 6)பண ஏடு 7)குறிப்பேடு பயன்கள்: 1)பணிகளைப் பகிர்ந்தளிப்பது 2)எழுத்தர் திறமையை வளர்ப்பது 3) விரைவில் செயல்முடிதல் 4) வேண்டிய தகவல் உடனுக்கு டன் கிடைத்தல் 5) எளிதில் சரி பார்த்தல்.

'subsidy - உதவித்தொகை: சில சரக்குகளை உற்பத்தி செய்பவ ருக்கு அரசு அளிக்கும் சலுகை. இதனால் பொருள்களை விலை குறைவாக விற்கலாம், அயல் நாட்டோரோடு போட்டி போடலாம். வேலையின்மையைப் போக்கலாம்.

subsistence crop – பிழைப்புப் பயிர்: தான் நுகர்வதற்கு மட்டும் உழவர் விளைவிக்கும் பயிர் - நெல்.

sunk capital – புதைமுதல்:செலவிடப்பட்ட ஒரு நிறு மத்தின் நிதியளவு மதிப்பற்ற சொத்துகளிலோ மீண்டும் பெற முடியாத செத்துகளிலோ செலவழிக்கப் பட்டிருக்கலாம்.

sunk costs – புதை செலவுகள்: செய்யப்பட்ட செலவுகள். எதிர் கால பண ஓட்டத்தை அதிகமாக் குவது.

super profit — மீஆதாயம்: இயல்பான பொருளாதார ஆதாயத்தைவிட அதிக ஆதாயம்.

super tax - மீவரி; மேல்வரி.