பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tari

107

tender


tariff - 1) சுங்கவரி: ஏற்றுமதி, இறக்குமதி வரி 2) கட்டணம்: சரக்குகள், விளம்பரம் முதலிய வற்றிற்குரிய கட்டண வீதம்.

tariff commission:சுங்க ஆணையம்: காப்பு வரி ஆணைக்குழு.

tariff duty – சுங்கத் தீர்வை;இறக்குமதி வரி.

taxable income –வரி விதிப்பிற்குரிய வருமானம்: சட்டப் படி ஒருவர் தன் வருவாய் க்குச் செலுத்த வேண்டிய வரி. உரிய சலுகைகள் நீங்க எஞ்சி இருக்கும் வருமானத்திற்குப் போடப் படும் வரி.

taxation - வரிவிதிப்பு: அரசு அல்லது ஓர் உள்ளாட்சி அமைப்பு தன் செலவினங் களுக்காகத் தனியார் அல்லது கூட்டு அமைப்புகளின் மீது போடும் தீர்வை.

tax clearance – வரித்தீர்வு: ஏதும் இல்லை என்னும் உறுதி.

tax relief — வரி நீக்கம்: வரி விதிப்பிற் குரிய தொகை யிலிருந்து கழிக்கப்படும் தொகை.

technological change - தொழில் நுட்ப மாற்றம்: தானி யங்கல், கணிப்பொறி வழி உற்பத்தி முறை ஆகியவற்றால் உற் பத்தி அளவு உயர்தல்.

telegraphic address - தொலைவரி முகவரி: ஒரு தனிச்சொல் குறியீடாகப் பயன் படுவது. செலவு குறைவது. தற் பொழுது இதற்கு மாற்று தொலை அதிர்வச்சு, உருநகலி.

teletext – தொலைவழிச் செய்தி: ஏற்புள்ள தொலைக் காட்சிக் கருவிகள் மூலம் வீடு அல்லது அலுவலகத்திற்குச் செய்தி தெரிவிக்கும் முறை.

telex - தொலை அதிர்வச்சு: தொலை அதிர்வச்சு எந்திரம் மூலம் எழுத்துச் செய்திகளை உலக அளவில் எந்த இடத்திற்கும் அனுப்புதல் ஒ.teletext.

teller - காசாளர்: வங்கிப் பணம் கொடுப்பவர். (பாரத வங்கியில் விரைவுக் காசாளர் என்று எழுதப்பட்டிருக்கும்).

tenancy agreement — குடிவார உடன்பாடு: நிலத்தைச் சாகுபடி செய்ய அதன் உரிமையாளருக் கும் சாகுபடி செய்பவருக்கு மிடையே ஏற்படும் ஒப்பந்தம். பா.lease.

tenancy right — குடிவார உரிமை: நிலத்தைச் சாகுபடி செய்யும் உரிமை.

tenant - குடிவாரதாரர்: சாகுபடி உரிமை யாளர்.

tender - ஒப்பந்தப்புள்ளி: ஒரு பொருளை அல்லது வேலை யை அதிகப் பேர விலைக்கு