பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tenor

108

trade


 ஏலம் விடுதல். பொதுவாகக் கட்டுமான வேலைகளில் பயன் படுவது. பழைய பொருள் களை விற்பதிலும் புதிய பொருள்களை வாங்குவதிலும் பயன்படுவது.

tenor - கெடு: உறுதிமுறி அல் லது மாற்றுண்டியலுக்குரிய பணம் அதில் குறிப்பிட்டுள்ள .கொடுபடுவதற்குரிய காலம்

term bill – தவணை உண்டியல்: தவணைக்கால மாற்றுச் சீட்டு.

term loan - தவணைக்கடன்: எந்திரம் முதலியவற்றிற்குத் தவணையின் பேரில் வங்கி கடன் கொடுப்பது.

term shares –தவணைப் பங்குகள்: குறிப்பிட்ட காலத்திற்குரிய பங்குகள்.

terms of trade – வணிக வீதம்: ஒரு நாட்டின் இறக்குமதி விலை ஏற்றுமதி விலைத் தொடர்பாக வுள்ள வாணிப வாய்ப்பளவு. இறக்குமதி விலைக்குறியீடு ஏற்றுமதி விலைக் குறியீடு ஆகிய இரண்டிற்குமுள்ள வீதம்.

third world – மூன்றாம் உலகம். வளர்ந்த, வளரும் நாடுகள். இந்தியா முதலியவை.

thresh-hoid price – வாயில் விலை: தொடக்க விலை. அடிப்படை விலை.

tight money — முடைப் பணம்: பா. dear money.

time deposit – கால வைப்புநிதி: தவணை வைப்பு நிதி. குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி தருமாறு வங்கியில் போடப் படும் பணம்.

title deed – உரிமை ஆவணம்: ஒரு சொத்தின் உரிமையளிக்கும் பத்திரம், எ-டு. வீட்டு உரிமைப் பத்திரம்.

total absorption costing — மொத்த உட்படுசெலவு: பொருள்களின் உற்பத்திச் செலவைக் கணக்கிடும் முறை. இதில் கணக்கில் கொள்ளப் படுவன: உழைப்பு, கச்சாப் பொருள்கள், பொது மேற்செல வுகள், தலைமையகச் செலவு கள்.

total creditors account – மொத்தக் கடனிந்தோர் கணக்கு.

total debtors account – மொத்தக் கடனாள் கணக்கு.

total income — மொத்த வருமானம்: வரி செலுத்து வோருக்கு எல்லா மூலங்களி லிருந்தும் கிடைக்கும் வரு மானம். இது சட்டப்படியான மொத்த வருமானம்.

total profits - மொத்த ஆதாயங்கள்: முதல் ஆதாயம் உட்பட எல்லா மூலங்களிலிருந்தும் ஒரு நிறுமத்திற்குக் கிடைக்கக் கூடிய வருமானம்.

trade - 1) வணிகம்: ஆதாயம் ஈட்டப் பொருள்களை விற்கும்